Saturday, May 20, 2017

நதியோரம்_சதிநேரம்-3


அமரேந்திரன் சற்று வியர்த்துப் போயிருந்தார் !
நாகராஜ் பின்னாலேயே தன் முன் தலையைத் துடைத்தவாறே விரைந்தார் !

கூட்டத்தை விலக்கியவாறு உள்ளே நுழைந்த அமரேந்திரன், சற்று இசகு பிசகாக, தலைகீழாக அந்த ஆலமர விழுதுகளோடு கட்டி வைக்கப் பட்டிருந்த அவனை (அதை)ப் பார்த்தார் !

கையில் க்ளவுஸ் போட்டு மெதுவா இறக்குங்க !  எந்த தடயமும் அழிஞ்சிடாமப் பார்த்துக்கோங்க என்று சொல்லியவாறே கையில் க்ளவுஸ் அணிந்து   கவிழ்ந்து போடப் பட்ட அந்த உருவத்தைப் புரட்டிப் போட்டார் !

  "நடு வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம் ! மூடாத கண்களில் மரண பீதி  மிச்சம் இருந்தது !  கழுத்து, நெஞ்சு, வயிறு என்று சரமாரியாக வெட்டு வாங்கியிருந்தான் ! கைகளைக் கவனித்த_போது_அமரேந்திரனின்_விரல்கள்_சற்று_நடுங்கின! அவனது ஆட்காட்டி விரல்கள் இரண்டும் வெட்டப் பட்டிருந்தன ! வாய் உப்பியிருந்தது!

    அமரேந்திரன் சீப்பை எடுத்து தன் மீசையைச் சீவியபடியே மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார் ! அவரது பையில் கைபேசி மணி ஒலித்தது!
 மெல்ல தன் காதுகளுக்குக் கொண்டு சென்ற அவரது உடல் சற்று விரைத்தது !
 எஸ் சார் !
 சார்....! உங்களுக்கு எப்படி ?
அய்யோ இல்லை சார்! இன்னும் தகவல் சொல்லலையே சார் !? எப்படித் தெரிஞ்சது ?
இல்லை சார் ! உங்க கிட்ட கேட்கலை சார் ! விசாரிக்கிறேன் சார் !
ஆமா சார்!
 இரண்டு பேர் சார் !
ஒருத்தர் மிராசுதார்னு சொன்னாங்க சார்!
ஆமா சார் ! இன்னும் இரண்டாவது ஆள் அடையாளம் தெரியலை சார் !
சரி சார் ! வாங்க சார்!
ஆமா சார் !
போஸ்ட் மார்ட்டம் அனுப்பப் போறேன் சார்!
சரி சார் பார்க்கறேன் சார் !
தேங்க் யூ சார் !
என்று தளர்ந்தார் !

யோவ் சின்னய்யா ! மீடியாக்கு யார்யா தகவல் சொன்னது ?  அதுக்குள்ள  நியூஸ்20 சேனல்ல  செய்தி சொல்றாங்களாம் !

   எவன் மீடியால இருந்து இருக்கான் பாருய்யா? எல்லோரயும் அப்புறப் படுத்து! இங்க யாரும் கேமராவோட இருக்கானான்னு பாரு! இருக்கற தலைவலி போதாதுன்னு இப்போ கமிசன்ர் வேற டைரக்டா ஸ்பாட்டுக்கு வராராம்!
என்று பொரிந்தார்!
 
ஐயா! இது யாருன்னு எனக்குத் தெரியுங்க! என்ற குரலில் நிமிர்ந்தார் !

யாருப்பா இது ? அய்யா ! இது நம்ம பக்கத்து ஊர் ப்ரெசிடென்ட் மகன்யா....! என்றதும் சற்றே நிமிர்ந்தார்!

அந்த ஆள் பேரு தெரியுமா ? செல்வராசுங்கய்யா !
ரெண்டு நாள் முன்னாடி தாங்கய்யா குவாரில பார்த்தேன் !  என்றான்!

உன் பேரு என்னப்பா என்ன பண்ற என்ற அமரேந்திரனைப் பார்த்து நெளிந்த படியே ஐயா என் பேரு வள்ளிநாயகம் (Valli Dpi) ! இங்கே அழகுச்சிலை அம்சலட்சுமி ரசிகர் மன்றத் தலைவராயிருக்கேன் என்றான்! அவரது முறைப்பை அலட்சியப் படுத்தியவாறே!

அப்போது ஏட்டு  ஒருவரை அழைத்துக் கொண்டு வந்தார்! சார் இவர்  தான் சார் பத்திரிகை ஆளு ! போட்டோ எடுத்து வாட்ஸப்புல அனுப்பிட்டு இருந்தாரு ! கூட்டியாந்தேன் என்றார்!

ஏய் ! மிஸ்டர் !  இங்க பேஸிக் விசாரணை கூட நடக்கலை ! அதுக்குள்ள மீடியால செய்தி போடறிங்களே !?  என்னய்யா தெரியும் இதைப் பத்தி? ஏன் இப்படி ப்ரச்னை பண்றிங்க ?
உங்க பேர் என்ன ? எந்தப் பத்திரிகை என்று அடுத்தடுத்த கேள்விகளைப் புன்னகையோடு எதிர் கொண்டவர் சிரித்துக் கொண்டே கை கொடுதார் !

என் பெயர் ஆனந்த்குமார் ! சித்தானந்த் ! ஃப்ரிலான்ஸ் ரிப்போர்ட்டர் !

நீங்க பதைபதைக்கற அளவு செத்தவங்க ஒன்னும் உத்தம சிகாமணிங்க இல்லையே என்றார்!

தொடரும் !