Saturday, January 26, 2008

வளமான தமிழகத்துக்கு வழியே இல்லையா?????

தண்ணீர் தர மறுக்கும் அண்டை நாடு.....!!

கண்ணீரோடு காத்திருக்கும்தஞ்சை நாடு......!!!

கன்னட தமிழ் பேதம் வளர்க்கும்

வல்லிய கயமைக் கூட்டம்....!!!

வெந்நீரை வேரில் ஊற்றும்

தந்நல அரசியல் கூட்டம்....!!!

இலவசமாய் எலிவிஷமானலும்

பரவசமாய் ஏற்கும் மக்கள்..!!!!

கலவரத்தால் தேர்தல் வெல்லும்

வன்முறை அரசியல்வியாதிகள்....!!!

சல்லாபமே சந்நியாசமாய்

எண்ணும்ஆன்மீக நரகல்கள்............!!!!

உயர்ந்தோங்கிய சம்பளம் உல்லாசத்துக்கே

என்றே எண்ணும் இளையோர் கூட்டம்...!!!!

விளையாட்டாய் பல விபரீதங்களை

இணைக்கும் இணையம்.....!!!!

நான்கு கட்சிக்கும் சாமரம் வீச

நான்கு தொலைக்காட்சிகள்...!!!!

வீட்டு அரிசி நிலை எவ்வாறானாலும்

அரசி பார்க்காவிடில் தூங்கா மகளிர்...!!!

இங்கே உண்டு பெண்டிருக்கு சமவுரிமை

பப்க(Pub)ளில் இருவராய் மட்டுமே அனுமதி...!!!

இதற்கா கேட்டோம் பெண்ணுரிமை....!!!!???

அவதார உருவங்களாய் வேடம் போடும்

அரசியல் சாணக்கியர், அகங்கார அம்மையார் நடுவே

அரிதார புருடர்களின் நாற்காலி கனவுகள்...!!!!

சிக்கித் தவித்து சின்னாபின்னமான கப்பல் போல்

ஒதுங்க வழியின்றி உட்காரும் மக்கள்....!!!!

ஐந்து வருடம் ஒருமுறை உள்ளெ வெளியே

ஆடி ரசிக்கும் மக்கள்,

அடுத்த ஐந்தாண்டு நமக்கே நமக்கு என

சிந்தித்து செ(பு)யல்படும் ஆட்சியாளர்கள்...!?????!!

வருமானம் வந்தால், தன்மானம் வேண்டாமெனும்

லஞ்சப்பேய் கொண்டாடும் நயவஞ்சோர்...!!

எததனை தான் சொல்வது, எதனை தான் விடுவது...??!!

எல்லா விதைகளும் விடமாய் மாறி

உணவே மருந்தான உன்னத காலம் போய்

உணவே விடமாய் உயிரை எடுக்கிறது...!!!!

9 comments:

பத்மா said...

irukku irukku neenga sonna points laam positivea patha irukku.nice start and nice sinthanai;keep writing

Learn said...

வாழ்த்துக்கள் உங்களை தமிழ்த்தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

விக்னேஷ்வரி said...

அழகா இருக்கு, உங்கள் வருத்தங்கள். மிக உண்மை.
நல்ல எழுத்துக்கள், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சுரேஷ்.

Anonymous said...

சுரேஷ், அருமை அருமை. தமிழனுக்கு வேதனைப்படத்தான் இயலும். கடமைகளின் கட்டுப்பாடு அவனுடைய எண்ணங்களைக் கூட தடை செய்து விடுகின்றன.

deesuresh said...

நன்றி ப்த்மா, விகனேஷ்வரி,தங்கவேல் மாணிக்கம், மற்றும் தமிழ்த்தோட்டக் குழும நண்பர்களுக்கு...!!

மதிபாலா said...

Fantastic Writings Suresh...Continue the posting and become member of tamilmanam.....your writings will be get more viewers!!

deesuresh said...

நன்றி பாலா, நானும் பதிந்து விட்டேன்

satheesh said...

nalla karuthodu rhyme tavarada tamil - nandru.

deesuresh said...

மிக்க நன்றி சத்தி