வரதராஜ புரமே ஆரவல்லி நதிக் கரையில் கூடி விட்டது !
ஆளாளுக்கு அதிர்ச்சியில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்!
அந்த சமயத்தில் சைரன் ஒலியோடு ஆம்புலன்ஸும், போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்தன !
இன்ஸ்பெக்டர் அமரேந்திரன் முன் சீட்டில் இருந்து கீழ் இறங்கினார் !
6 அடி உயரத்தில், தமிழக போலீஸின் முக்கிய அங்கமான தொப்பை சற்றும் குறைவில்லாமல் அதைக் கஷ்டப்பட்டு பெல்ட்டுக்குள் அடக்கியிருந்தார் அல்லது அடக்க முயற்சி செய்திருந்தார் ! தொங்கி நிமிர்ந்த மீசையை தன் பையில் இருந்த சிறு சீப்பினால் சீவினார்!, தொப்பியைக் கழற்றி, பளிச் சென்றிருந்த தன் முன் வழுக்கையை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே அணிந்திருந்த கூலிங் கிளாஸைக் கழற்றி சட்டைப் பையில் வைத்தார் ! தூக்கமின்மையும் நேற்று அருந்திய திரவத்தின் எச்சமும் சிவப்பு வரிகளாய், கண்ணின் கீழே அணிவகுத்தன !
யாருய்யா இதைப் பார்த்தது ? வரச் சொல்லு என்று அங்கிருந்த ஒரு மர நிழலில் போய் நின்றார் !
பயந்து நடுங்கிக் கொண்டே அமுதா, கருப்பாயி, வேலாயி மூவரும் முன் வந்து நின்றனர் !
யாரும்மா முதல்ல பார்த்தது ? என்று கேட்டதும் வேலாயி மெல்லக் கையுயர்த்தி நான் தானுங்கய்யா என்றாள் ! நாய் குலைச்சி எதையோ இழுத்துச்சுங்கய்யா ! நான் அதை விரட்டப் பார்த்தப்ப புதர் நடுவுல வந்து ........ என்றாள் இன்னும் பதற்றம் குறையாத வேலாயி !
அவள் சொல்வதை அப்படியே குறித்துக் கொண்ட அமரேந்திரன், ஏட்டய்யாவிடம் மாரிமுத்து, ஃபாரன்ஸிக் டீம் வந்தாச்சா ? பாடி கிட்ட எதும் தடயம் கிடைக்குதான்னு பார்த்திங்களா ? சின்னய்யா குடும்பத்துல இருந்து யாரும் வந்திருக்காங்களா என்று வரிசையாய்க் கேட்டுக் கொண்டே கான்ஸ்டபிள்களைக் கூட்டத்தை விலக்குமாறு சொல்லிக் கொண்டே "எலேய் ! யாரும் பொணத்தைத் தொடல்லியே! வெலகுங்க, வெலகுங்க, என்று விழி விரித்து இறந்து கிடந்த சின்னைய்யாவிற்கு அருகில் வந்தார் !
கண்கள் மேலே செருகி, கழுத்து, மார்பு , கை , கால் என்று பல இடங்களில் வெட்டு வாங்கி கொடூரமாகச் செத்திருந்தார் சின்னய்யா ! அவர் அணிந்திருந்த கண்ணாடி அருகில் நொறுங்கி விழுந்து கிடந்தது !
அப்போது தான் கவனித்தார் ! சின்னைய்யா வின் இரு கைகளிலும் நடு விரல் வெட்டப் பட்டிருப்பதை !
Dog Squad வந்து சேர்ந்தது ! மெல்ல சடலம் இருந்த இடத்தை முகர்ந்து விட்டு கரையின் உள்ளே ஓட ஆரம்பித்தது போலிஸ் நாய் ஸீசர் ! தொடர்ந்து அதன் ட்ரெய்னரும் கான்ஸ்டபிளும் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே அமரேந்திரன் சீப்பை எடுத்து தனது மீசையை சீவிக் கொண்டார் !
அப்போது சார்..!!!!!!
என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க ஓடி வந்த கான்ஸ்டபிள்
சார் ..!
சார்....! அங்க
.
.
.
.
.
.அங்கே
என்று முடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார் !
என்ன நாகராஜ் என்னாச்சுய்யா என்று வினவ
சார் ! அங்கேயும் ஒரு பொணம் சார் ....!
என்று பதற,
அமரேந்திரனுக்கு சட்டென்று இதயம் நின்று துடித்தது !
இந்த கேஸ் நம்மைச் சக்கையாக அலைக்கழிக்கப் போகிறது ......!! என்று தன் தலையைக் கர்சீப்பால் துடைத்தார் !
.... தொடரும் !

No comments:
Post a Comment