Thursday, October 23, 2008

என்ன தான் செய்யப் போகிறீர்கள் கலைஞர் அய்யா அவர்களே ..??

முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்களின் கொலைக்குப் பிறகு, மறந்தும் கூட ஈழ ஆதரவு நிலை எடுக்காத கலைஞர் அவர்கள், மத்திய அரசின் ஆயுள் முடியக் கூடிய இந்நேரத்தில் திடீரென ஈழஆதரவு திலகமாய் மாறிப்போனார் . உடனே கலைஞர் அனுதாபிகள் ஓடி வருவார்கள்...!! தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கற்பா பாடினார் என்று ..!! அடுத்த நாளே தமிழ்செல்வனை மறைவிற்கு இர ங் க்கூட்டம் நடத்தியதை தடுத்ததை வசதியாக மறந்து போவார்கள்...!!

இதோ இப்போது கூட, இத்துணை நாள் வராத சோகமும், துக்கமும், அய்யா மனதை திடீரென எப்படி ஆழமாய் தைத்ததோ தெரியவில்லை, ஈழத்தமிழரை ஆதரிக்க வந்தார். சரி வரவேற்போம். என் சகோதரனுக்கு எங்கிருந்து ஆதரவு வந்தாலும் சரி என்று.

முதலில் எல்லோரும் தந்தி அடியுங்கள் என்றார். சரி, அடிக்கலாம்னு சந்தோஷப் பட்டோம். ஆனால் ஒரு கேள்வி அடி மனசில் தொத்திகிட்டு நின்னுச்சு..!! நம்மளைத் தந்தி அடிக்க சொன்னவர், மத்திய அரசுக்கு, " அப்பு..!! இலங்கை அரசுக்கு உதவி பண்றதை நிறுத்துங்க, இல்லாங்காட்டி, நான் ஆதரவை வாபஸ் பெறுவேன் அப்படின்னு ஒரு தந்தி அடிச்சிருக்கலாமேன்னு...!!!

கொலை பண்ணினவன், கொள்ளை அடிச்சவன் எல்லாம் மத்திய அரசை மிரட்டி பதவி வாங்கறப்ப, இது உணர்வுப் போராட்டமாச்சே ..!! தமிழா இன உணர்வு கொள் அப்படின்னு நமக்கெல்லாம் சொன்னவரு, ஒரு வாயும் திறக்கலை...!!

முன்னாடியே, இலங்கை கடற்படை கடத்திட்டு போன மீனவர்களை, புலிகள் தான் கடத்தினாங்கன்னு ஒரு டிராமா ஓடிச்சு, அப்பயும் நம்ம கலைஞர் தான் முதலமைச்சருங்கோ..!!! அப்பஎல்லாம் வராத ஈழ பாசம், திடீர்னு அம்மையார், ஈழ மக்கள் கொலையை எதிர்த்து அதிசயமாய் ஒரு அறிக்கை விட்டதும், குபுக்கடீர்னு எழுந்து வந்துச்சு..!!! ஆஹா, இந்த ஒன்னுலயும் இந்த அம்மா ஆட்டயக் குழப்பிடுமொன்னு ..!!

அந்த அம்மா புத்தி இரண்டு நாலா வெளுத்துப் போச்சுன்னு வச்சுக்கங்க..!!

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார் ..!!! அம்மா வழக்கம் போல வரலை. வைகோவும் வரலை..!! அப்பக் கூட திறமையாக தன் சாமர்த்தியத்தைக் காண்பித்தார். மனித சங்கிலி போராட்டம்னு அறிவிச்சார். இயற்கை வேற ஹெல்ப் அவருக்கு.!!! மழை..!!! மழையினால் கூட்டம் ஒத்தி வைப்புன்னு போட்டார் பாருங்க ஒரு பிரேக் ..!!

அங்க நம்ம சகோதரன் குண்டு மழையில் செத்துட்டு இருக்கான், இங்க இந்த மழை என்னங்க பண்ணும். சரி இரண்டு நாளில் போராட்டம் நடக்கும்னு சொல்லிட்டார்னு சந்தோஷப் பட்டோம்.
ஆனால் அன்னிக்கு ஈழத் தமிழர் நிலைக்க்காகப் பேசின சற்று உணர்ச்சிப் பூர்வமாய்ப் பேசின வைகோவைக் கைது செய்துட்டார். சட்டம் தன் கடமையைச் செய்யும்னு..!!

அடுத்த நாளே திரைக் கலைஞர்கள் கூடத்தில் பேசின அமீரும், சீமானும் கைது செய்யப் பட்டார்கள்.

சரி, கலைஞர் எதோ பிரஷர்ல இருக்கார் போல...! இருபது ஒன்பதாம் தேதி தன் வீரத்தை வெளிப் படுத்திடுவார்னு வழக்கம் போல எல்லா இனாவானா தமிழன் போல நானும் காத்திட்டு இருந்தேன். பிரணப் முகர்ஜின்னு ஒரு அமைச்சர் வந்துட்டு, "நாங்க சொல்லிட்டோம், அவங்க சரின்னு சொல்லிட்டாங்க, நீங்க ரிசைன் பண்ண வேண்டாம், என்ஜாய் னு சொல்லிட்டு போய்ட்டார். நம்மாளும் ராஜினாமாவை ஒத்தி வச்சுட்டாராம்.

அய்யா கலைஞர் அவர்களே..!!! அங்கிருக்கும் தமிழன் உங்களிடம் நிதி உதவி கேட்க வில்லை...!! உங்கள் உணர்வுகளால், உதவுங்கள், எங்கள் மண்ணைக்காக்க உதவுங்கள் என்று தான் கேட்கிறான். ஆனால் உங்கள் இல்லத்தின் வாசலில் நின்று கொண்டே, அயலுறவுத்துறை அமைச்சர், இலங்கைக்கு ஆயுத உதவி நிறுத்த முடியாது என்கிறார். நீங்களும் வாளாவிருக்கிறீர்கள்..!!

இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை அல்லவா தொடங்கி இருக்கிறீர்கள்...!!!

உங்களை இன்னும் தமிழுனர்வுக் காவலராய் எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் எங்களைப் போன்ற கோடானு கோடித தமிழர்களை இன்னும் ஏன் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்..??

தங்கள் பதவி என்னும் துண்டைக் காப்பாற்றிக் கொள்ள, எங்கள் தமிழர்களின் வேட்டியை உருவினால் பரவாயில்லை, உயிரை அல்லவா உருவும் கும்பலுக்கு துணை போகிறீர்கள்..??

அந்த அம்மையைப் போல் உணர்வற்ற தன்மை, உங்கள் துரோகத்துக்கு எவ்வளவோ பரவாயில்லை..!!

அவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் என்று எங்களுக்கு நிதர்சனமாய்த் தெரியும்...!! ஏமாற மாட்டோம்..!!

தன்மானத் தமிழர் என்றல்லவா இன்றுவரை உங்களுக்கு கூஜா தூக்கியவர்கள் கூட, வெட்கித் தலை குனியும் நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள்..!!!

இலவசம் என்னும் மாயையை மட்டும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாள்..???

வயோதிகம் என்ற நோயில், உணர்வுகளையுமா மொத்தமாய் இழக்க வைத்து விட்டது..??

பதவி என்பது துண்டு என்றீர்களாம்..!! இன்றோ அங்கே தமிழன் தலை துண்டானாலும் எனக்கு முக்கியம் பதவி என்கிறீர்கள்..!!

ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம் என்றால்..!! நீங்கள் தமிழனிப் புரிந்து கொண்டது அவ்வளவுதானோ..??

மீண்டும் அவன் உங்களுக்குத தேர்தலில் ஓட்டளிக்க மாட்டானா??

தங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...!!

இன்னும் எங்களைப் போல் பல பேர் உங்களை தமிழர் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..!! உங்கள் நிஜ முகம் வெளிப்பட ஆரம்பித்தால், ஒரு தமிழனாய் பிறந்தவன் கூட உங்களுக்கு ஓட்டளிக்க வெட்கப் படுவான் என்பது திண்ணம்...!!

இங்ஙனம்

இன்னும் உங்களை நம்பும்

தமிழ்க் குடி மகன்

Sunday, October 12, 2008

இன்னும் எத்தனை காலத்துக்கு மௌனம்?

கண்ணீர்த் துளி தேசத்தில் என்றும் கண்ணீர்த்துளி

வெந்நீர் ஊற்ற உதவும் தேசமாய் நாம்..??

செந்நீர் சிந்தும் சகோதரனுக்கு உதவ மனமில்லை

புண்ணாகிப் போன மனதவனுக்கு

மண்ணாகிப் போன வாழ்க்கை மீண்டும் கிடைக்க

பொன்னான தேசம் அமைதி திரும்ப

என்ன கேட்கப் போகிறான் அவன்..??

உதவி செய்யச் சொல்லவில்லை.-- அவனுக்கு

உதவி செய்யாதே என்று தாம் சொல்கிறோம்

விண்ணிலும், மண்ணிலும் நீரிலும் சிறந்த

கண்ணியமிக்க வீரர்களைக் காவு கொடுக்க

என்னுடைய சகோதரனை பலிகடாவாக்காதே..!!

ராச பக்சேக்களின் உதிர வெறிக்கு

ராச்சியம் அமைக்கவுதவும் மன்னுமோகன்கள்

பதவி என்பது துண்டு என்றவரும், இன்று

பதவித்துண்டுக்காய் பறக்கும் அவலம்

உணர்வுள்ளவரே உதவாத போது -

உணர்வற்ற அம்மைகளிடம் எப்படி எதிர்பார்ப்போம்

உணர்வான மக்களே ஒன்று சேர்வோம்

உடன்பிறப்புக்களுக்கு உதவுவோம்