Tuesday, October 19, 2010

விடி வெள்ளி ஒரு அறிமுகம்

இணையத்தில் உலா வரும் போது எனக்கு நண்பர்களைப் பெற்றுத் தந்ததில் ஆர்குட் இணையதளத்துக்குப் பெரும் பங்கு உண்டு..!! ஆர்குட் இணையதளத்தில் "தமிழக் அரசியல் குழுமம்(TNP)" என்ற குழுமம் மூலம் தமிழக அரசியல்பேசினோம்....!! அரசியல் தாண்டி நட்பு பேசினோம்..!! ஒரு அழகிய நட்பு வட்டம் உருவானது..!! ஒரே சிந்தனைகள் உள்ள பலரும் இணைந்த போது, அரட்டை தாண்டி சமூகப் பொறுப்புடன் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எங்களுக்கிடையே உருவானது...!!

அதே சமயத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள பொம்மிக் குப்பம் என்ற மலையடிவார கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்காக அந்த ஊர் மக்கள் முயற்சி செய்வதையும், அதற்கான முயற்சியில் உதவி செய்ய உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்தி இயக்கத்தினர் இணைந்திருப்பதையும் அறிந்தோம். TNP என்ற ஆர்குட் குழுமத்தின் மூலம் அந்தப் பணியில் எங்களையும்

இணைத்துக் கொண்டோம். அவர்களுக்குத் தேவையான பண உதவிகளைச் செய்தோம்.

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=7222740&tid=2582393196078992381&kw=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

இந்தப் பணியின் உந்துதல் காரணமாக

"ஆயிரம் ஏழைகளுகு உணவளிப்பதை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைமைக்கு ஒப்பானது" என்ற கூற்றுக்கு ஏற்ப, சமூகத்தில் படிக்க ஆர்வமிருந்தும் வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உதவலாம் என்ற கருத்தை முன்வைத்துக் களமிறங்கத் தீர்மானித்தோம்.

அப்போது தான் ஈழத்தில் பிறந்து, போர்க் காரணங்களால் அகதி என்ற பெயர் சூட்டி, முகாம்களில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும், நம் தொப்புள்க் கொடி உறவுகளில் பலர் ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும், அரசு சலுகைகள் ஏதுமில்லாத காரணத்தினாலேயே, மேல்நிலைக் கல்வியை எட்டாக் கனியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்றறிந்தோம்.

ஈழத்தை மீட்டெடுக்கப் போர்முனை தான் செல்லவில்லை..!! நம் ஏதிலி சகோதர, சகோதரிகளில் ஓரிருவரின் சீர்மிகு கல்வியில் சிறு பங்காற்றுவோமே என்று முடிவெடுத்து உருவான ஒரு அரசு சாரா அமைப்பு தான் " விடி வெள்ளி"

விடி வெள்ளி

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமிலிருந்து இரு ஆர்வமிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி உதவி செய்யத் திட்டமிட்டோம். அவ்வாறே தேர்ந்தெடுத்து முதலாம் ஆண்டு உதவிகளைச் செய்தோம். இது சிறு விதையாய் ஜீலை 2009ல் ஊன்றப்பட்டது, இன்று சிறு செடியாய் முளைத்திருக்கிறது....!!!

இணையத்தின் நண்பர்களாய் இணைந்த பலர் கை கொடுத்தனர்...!! முதலாம் ஆண்டுக்கான தொகை கட்டப் பட்டது. இரண்டு மாணவர்களோடு தொடங்கிய எங்கள் முயற்சி, கல்வி ஆர்வத்தால் கோரிக்கை வைத்த மேலும் இரண்டு மாணவர்களோடு நான்காய் உயர்ந்திருக்கிறது..!!

நிரஞ்சன், புவனேஸ்வரி, பிரதீபா,ஷோபனா என்ற நான்கு பிள்ளைகளின் இரண்டாம் ஆண்டுக்கான கட்டணங்களுக்கான காலம் தொடங்கியிருக்கிறது...!! வழக்கம் போல் சென்ற ஆண்டு உதவிட்ட நண்பர்களும் இந்த ஆண்டு உதவிகள் செய்யத் தொடங்கி விட்டனர். சென்ற ஆண்டு இரண்டு மாணவர்கள் பயன் பெற்றதால் அவர்களுக்கான உதவி நண்பர்களின் வட்டத்தில் மிக எளிதாக இருந்தது. இப்போது நான்கு மாணவர்களாய் உயர்ந்திருக்கும் இவ்வமைப்பின் வட்டம் விரிவு படுத்தப் படவேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே நம் விடிவெள்ளியின் அறிமுகம்....!! இரண்டு பேருக்கான உதவி நான்காய் உயர்ந்தது போல , நான்கு, நாற்பதாய், நாற்பது, நானூறாய் உயரவேண்டும் என்ற மாறாத ஆசையில் உங்களிடையே இந்தப் பதிவை எழுதுகிறேன்..!!

விடி வெள்ளி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு..!!! சில நண்பர்கள் வட்டத்தோடு ஆரம்பிக்கப் பட்ட இவ்வமைப்பில் நம் முக நூல் அன்பர்களும் இணையவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...!!

முகநூலில் கூட விடி வெள்ளிக்கான இணையப் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம்..!!

http://www.facebook.com/group.php?gid=146680245353864

ஊர் கூடித் தேர் இழுக்கலாம் என்று கூறுவார்கள்..!! இணையத்தால், இதயத்தால் இணைந்திருக்கும் நாம் இது போன்ற சமூகச் சிந்தனைகளிலும், கை கோர்ப்போம்..!!

உங்களின் தோள் வேண்டும் தோழனின் சிறு மடல்..!!


Sunday, October 3, 2010

எந்திரன் ஒரு ரசிகனின் பார்வையில்


வாழ்க்கையில் நானும் முதல் முறையாய் ரஜினி படத்தை முதல் நாளே பார்த்து விட்டேன்..!! ரஜினி என்ற மனிதன் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ரஜினி என்ற நடிகனின் ரசிகன் நான்..!! திரைக்குள்ளே அவர் போடும் வேடத்தை மிக ரசிப்பவன்..!! கமல், ஷாருக் கான் போன்றவர்கள் மறுதலித்த ஒரு படத்தில் ரஜினி நடிக்கிறார் அதுவும் ரோபோ பாத்திரம் என்ற செய்தி வந்த போதே எல்லா ரசிகர்களைப் போல் எனக்கும் ஆர்வம் அதிகமாய் இருந்தது..!!

ஆனாலும் ஷங்கர் படம் என்றாலே எனக்கு ஒரு தோசை அலர்ஜி..!! ஒரே தோசையை பொடி போட்டு பொடி தோசை, தக்காளி போட்டு தக்காளி தோசை, வெங்காயம் போட்டு ஆனியன் தோசைன்னு அதிக விலை கொடுத்து விக்கற மாதிரி ஒரே கதையை அர்ஜீன், கமல், விக்ரம், ரஜினிக்கு போட்டு விட்டு காசு பார்த்தவர் அவர்..!! என்ற பயமும் இருந்தது..!! லஞ்சம் வாங்கறவங்களை ரோபோ சாகடிக்கற மாதிரி காமிச்சிருவாரோன்னு..!!

ரஜினியின் எல்லாப் படங்கள் வெளியீட்டிற்கும் முன்பாக எதாவது ஒரு பிரச்னை ரஜினியைச் சுற்றி வரும்..!! மனுசன் வேகமாகப் பேசுவார்..!! பின்னால் வியாபாரத்துக்காக சமாதானமும் பேசுவார்..!!

இந்தப் படத்துக்கும் வந்தது மகளின் திருமண வடிவில்...!! சமாளிச்சுட்டார்னு வச்சுக்கங்க..!!

இனி எந்திரன்...!!

கும்பலில் புகுந்து, கஷ்டப் படாமல் டிக்கெட் எடுத்து ( 200 ருவா சாமியோவ்) எல்லோரையும் போலவே அதிக எதிர்பார்ப்புக்களோடு திரையில் வரும் பிம்பங்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்..!1

ஆரம்பமே ஆச்சரியம் தான்.! நூறு நடிகர்கள் புடை சூழ ஏவிஎம் பிள்ளையாரிடம் தேங்காய் உடைக்காமல், , 3 கிலோ மீட்டர் நடந்து தத்துவப் பாட்டு பாடாமல் வெகு இயல்பாக விஞ்ஞானி வசீகரனாக ரஜினி அறிமுகமாவது..!!!

மெகா பைட், ஐபி அட்ரஸ், அது இது என்று கடைசி ரசிகனுக்குப் புரியாத மொழிகளில் மெதுவாக படம் ஆரம்பிக்கையிலேயே அழகான இன்னொரு ரஜினி "சிட்டி" ரோபோ வாக அறிமுகமாக மெல்ல படத்துக்குள் உள் செல்ல ஆரம்பித்தேன்..!!

உணர்வற்ற இயந்திர மனிதனுக்கு உணர்வுகளின் வலியை புரிய வைத்த விபரீதத்தால் விளையும் விபரீதங்களே

"எந்திரன்"

முதலில் இயக்குநர் ஷங்கர், மற்றும் சாபு சிரில், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் கண்ணுக்குத் தெரியாத அந்த கிராஃபிக்ஸ் மகானுபாவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..!! ஆங்கிலப் படத்துக்கு இணையாக தமிழிலும் மிரட்ட முடியும் என்று காண்பித்ததற்கு.....!!!

எந்திரன் = ரஜினி என்று ஒரு வார்த்தையில் கூட இந்தப் படத்தின் விமர்சனத்தை முடித்து விடலாம்..!! அந்த அளவு எங்கும் ரஜினி, எதிலும் ரஜினி, அனைத்தும் ரஜினி என்று படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார் ரஜினி..!!

மிக அமைதியான வசீகரன் ஆகட்டும், விளையாட்டுப் புத்திகள் நிறைந்த ஆரம்ப சிட்டி ரோபாவாகட்டும், கடைசியில் ஆக்ரோஷம் காட்டும் வில்லனாகட்டும் எல்லா இடங்களிலும் புகுந்து விளையாடுகிறார் ரஜினி..!!

"படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் சொல்வது போல் " வயசானாலும் அவர் இளமை இன்னும் போகலைப்பா"

உண்மையில் கிராஃபிகஸ், டூப் என்று பல விஷயங்கள் இருந்தாலும் ரஜினியின் திரை வாழ்வில் எந்திரன் இன்னொரு மைல் கல் தான்..!!!

அதுவும் வில்லத்தனம் நிறைந்த சிட்டியாய் மாறியதும் சும்மா பிச்சு உதறுகிறார்..!! ரோபோக்களின் நடுவில் விஞ்ஞானி வசீகரனைத் தேடி நடுவில் ஒரு ரோபோவை வெட்டி விட்டு, ஐஸ்வர்யாவைப் பார்த்து ரோ...போ..!! என்று அலட்சியமாய்ச் சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது...!!

வசீகரனைக் கண்டுபிடித்து விட்டு எக்காளமிட்டுக் கொண்டு ஆட்டுக் குரலில் கனைத்துக் கொண்டே நக்கலிடும் காட்சிகளில் ரஜினி ராஜ்யம் தான்..!!!

குழந்தை பிரசவக் காட்சிகளிலும், கடைசிக் காட்சிகளிலும் சென்டிமெண்டுக்கும் ரஜினி குறை வைக்கவில்லை..!!

ஒரு கட்டத்தில் சிட்டி ரஜினி பாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக, வசீகரனை "டம்மி பீஸ்" மாதிரிக் கூட ஆக்கி விடுகிறார் இயக்குநர்..!!

ரஜினி படங்களில் ரஜினி தான் எல்லாம்.....!! கதாநாயகிக்குப் பெரிதாய் பங்கிருப்பதில்லை..!! எந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல..!! ஐஸ்வர்யா ராயாய் இருந்தாலும் அது லட்சுமிராய் ஆக இருந்தாலும் அவர்கள் பணி நாயகனைக் காதலித்துக் கிடப்பதே..!! இதிலும் அது தான் நடக்கிறது..!!

ஐஸ்வர்யா ராய்...!! ஒரு காலத்தில் உலக அழகி...!! இப்போ கொஞ்சம் வயதாகி விட்டது என்பது ஒளிப்பதிவாளருக்கே தெரிந்ததால் மிக குளோசப் காட்சிகளைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்..!! இருந்தாலும் சில காட்சிகளில் ஐஸ்.. அழகு தான்..!!

மற்றபடி ரஜினி படங்களுக்கே உரிய கதாநாயகிக்கான வேலையைச் செய்கிறார் சரியாக..!! கதையின் திருப்பம் அவரைச் சுற்றிப் படைக்கப் பட்டிருக்கிறது..!!

இசை = இரைச்சல் = ஏ.ஆர். ரகுமான்..!! இசைக் கருவிகளின் சத்தத்தில் இலக்கிய நயமிக்க வைரமுத்துவின் சில வரிகள் கூட மறைந்து போகின்றன..!! இன்னும் கொஞ்சம் மிரட்டலாக இசை இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து...!!

சந்தானம், கருணாஸ், தேவ தர்சினி, மற்றும் பலர் ரஜினி, ஐஸ் போக மீதி இருக்கும் இடத்தை நிரப்ப வந்து போகின்றனர்...!!

எதற்கு வந்தோம்..!! எதற்கு செத்தோம்..!! என்றே தெரியாத அப்பாவி வில்லனாக கேரக்டரி டேனி..!! (பாவம் ஹிந்தியில சூப்பர் வில்லன்ங்க அவரு..!!)

கடைசி அரைமணிநேரம் பரபரப்பு , விறு விறுப்பு, பிரமிப்பு என்று கலந்து கட்டி கிராஃபிக்ஸ் களியாட்டம் நடத்தியிருக்கிறார் இயக்குநர்..!! ரஜினி ரஜினிரஜினி ரஜினிரஜினி ரஜினிரஜினி ரஜினி ரஜினி ரஜினி என்று திரை முழுவதும் ஏகப்பட்ட ரஜினிகள் நடமாட, பாட்டுப் பாட, சண்டை போட என்று மிரட்டியிருக்கிறார்..!!

ஆங்காங்கே நக்கல் தெரிக்கும் "சுஜாதாவின் வசனங்கள் அவரின் இழப்பை நினைவு படுத்துகின்றன..!!

முதல் பாதி சற்று நீளமாய் இருந்தாலும், அடுத்த பாதி ரஜினி என்னும் மந்திரத்தால் மின்னலாய் ஓடுகிறது..!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..!! பெரியவர்களுக்கும் பிடிக்காமல் போகாது..!!

எப்படியோ ஷங்கரின் கனவை நனவாக்கிய சன் பிக்சர்ஸ்க்கு ஒரு "ஓ" போடுவோம்..!! ( அந்தக் காசுல மறைமுகமாய் நமக்கும் பங்கு இருக்குங்க...!!!) :))

ஆக மொத்தத்தில் ஒரு முழுமையான பொழுது போக்குக்கு உத்தரவாதம் .. எந்திரன்..!!!