Saturday, February 20, 2010

சுரேஷின் பக்கங்கள்: கடனட்டை என்னும் அட்டைப் பூச்சி

சுரேஷின் பக்கங்கள்: கடனட்டை என்னும் அட்டைப் பூச்சி

கடனட்டை என்னும் அட்டைப் பூச்சி

நன்றாய் வைத்தார்கள் கடன் அட்டை credit card என்ற பெயரை...!!! அட்டையைப் போல் உதிரம் உறிஞ்சும் உன்னத தோழனிடம் மாட்டிய அனுபவங்களைச் சொல்லலாம் என்று தான் இந்த பில்டப்..!

இந்தக் கடனட்டை மாயையை எனக்குத் தோற்றுவித்த அந்தக் குளிர்பான நிறுவன வேலையை எண்ணிப் பார்க்கிறேன்...!!

வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு கோக் விற்றுக் கொண்டிருந்த எனக்கு, ஷாக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தது நகர வங்கி தான்..!!

அப்போது நான் கோவையில் வேலை பார்த்து வந்தேன். ஒரு நாளின் மதிய வேளையில், உணவருந்தி விட்டுச் சற்றுப் புகையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த நகர வங்கியின் வாய்மொழிப் பிரதிநிதியாய் மாறா இனிமையான பெண்குரல் ஒன்று எனது கைபேசி வழியே காதுகளுக்குள் நுழைந்தது...!!

"சார்..!! எங்க சி.... பேங்கோட வேல்யூயபில் க்ஸ்டமர் சார் நீங்க..!! நீங்க மல்டி நேசனல் கம்பெனியில் வேலை பார்க்கறதால், உங்களுக்கு கோல்டு கார்டே கிடைக்கும் சார் ..!! என்று என்னவோ எனக்கு தங்கக் கட்டிகளை தட்டில் அடுக்கிக் கொடுப்பது போல் கலகலவென தமிழும், எளிமையான ஆங்கிலம் கலந்த பேச்சில் விழுந்து, ( அங்க தான் விதி டார்ச்லைட் அடித்தது) , " நான் என்னங்க பண்ணனும்..? என்றேன்..!!" வலையில் சிக்கிய மீனைக் கண்ட மீனவனின் குதூகலத்துடன் அந்தப் பெண்மணி தங்கள் வியாபார இலக்கான என்னை அடகு வைக்கும் வேலையை அழகாக ஆரம்பித்தார்..!!

"நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம் சார்..!! எங்க ரெப்பை அனுப்பறேன்...!! 4 இடத்துல சைன் பண்ணி,ஒரு போட்டோ, அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப் மட்டும் கொடுங்க சார் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் " என்றார்..!! பக்கத்திலுருந்த நண்பனிடம், "மச்சான்..!! சி. பேங்க் கார்டு தரேன்னு சொல்றாண்டா..!!" என்றேன்..!!

அவன் மாம்ஸ், மிஸ் பண்ணிடாத, சி.. பேங்க்ல லேசுல கார்ட் தரமாட்டாங்க..!! நல்ல சான்ஸ்டா..! என்று சற்றுத் தயங்கிய என்னுள், மின்சாரம் பாய்ச்சினான்..!!

சரி வரச் சொல்லுங்க என்றேன்..!!! வந்து , காட்டும் இடமெல்லாம் கையெழுத்திட்டு, எனக்கு நானே வலை விரித்தேன்...!!!

பத்து நாட்களில் பளபளவென, தங்கக் கலரில் அந்த மனவாயுதம் கூரியரில் வந்து என் பர்ஸில் தஞ்சமடைந்தது..!! தன் தோழர்கள் அனைவரிடமும் அந்த சி.. வங்கிப் பிரதிநிதி..!! " டேய்... ! ஒரு அடிமை சிக்கிருக்காண்டா..!! சொத்தெழுதி வாங்கிருவோம்" என்று சொன்னானோ என்னவோ தெரியவில்லை..!! ஐ.... வங்கி, H...C வங்கி, மாநில வங்கி, AB.... Oவங்கி என தொடர்ந்து படையெடுத்துத்
தங்களது கடனட்டைகளை அள்ளித் தந்தனர்..!!

எத்தனை கடனட்டை இருக்கிறதோ, அத்தனை ஸ்டேட்டஸ் என்ற ஒரு மாயையில் சிக்கினேன்..!!

கோவை குண்டு வெடிப்பு மற்றொரு முறை என் மனதில் அரங்கேறியது..!! பார்ட்டி என்ற வடிவில்..!!!

தொடரும்...!