Wednesday, May 24, 2017

நதியோரம்_சதிநேரம்_4#சென்னை

நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள 
பிஎஸ் கார்டன் பகுதி ! பல விஐபிக்கள் குடியிருக்கும் இடம் ! 

அதிகாலை 5:30 மணி

அமைச்சர் S D மூர்த்தி கண் விழித்தார் ! தன் இரு கைகளையும் பார்த்துக் கொண்டே மேலே மாட்டியுள்ள அம்மன் படத்தைப் பார்த்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு வணங்கினார்! அருகில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றார் !
 வெளியே வரும் போது ஜாகிங் ட்ரெஸ்ஸில் இருந்தார்! 
மெல்ல படுக்கை அருகே வந்து சிறு கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கைபேசியை எடுத்துக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கினார் !

  பொதுப் பணித் துறை அமைச்சர் SDM பிறந்த நாள் வாழ்த்துகள்  என்று வெளியே இருந்த பேனர்களைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த காவலர்கள் அடித்த சல்யூட்டை அலட்சியப் படுத்தி விட்டு மெல்ல நடக்க ஆரம்பித்தார் !
   ஏறக் குறைய 51/2 அடிக்குச் சற்று அதிகமான உயரம் ! மெல்லிய ரிம்லெஸ் கண்ணாடி, ஹேர்டை ஆங்காங்கே நாசுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் காதோரம் மட்டும் லேசாக நரை தெரிந்தது! கழுத்தில் ஒரு பெரிய செயின் வெளியே தெரிந்து மறைந்தது! அவர் இரு விரல்களில் அணிந்த பெரிய மோதிரங்களில்   ஒன்றில் கட்சியின் சின்னமும், இன்னொன்றில் அவரது தலைவரின் படமும் பெரிதாக டாலடித்தன !  சற்றே பெருத்த வயிறை இருக்கிக் கட்டியிருந்த ட்ராக் சூட் திமிறிக் கொண்டிருந்தது !
தமிழக அரசியலின் மிக முக்கிய பிரமுகரான எஸ்டிஎம் அதற்கு முந்தைய நாள் தான் தனது 43வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி   அனைத்துப் பத்திரிகைகள் ஊடகங்கள் பரபரப்பான பிரேக்கிங் நியூஸோடு நலத்திட்ட   உதவிகள், அனாதை இல்லத் தத்தெடுப்பு, மத்திய அமைச்சர் வருகை, தலைவர் இல்லம் வந்து வாழ்த்து என்று  தனது  பலத்தைத் தெளிவாகத்   தலைமைக்குத் தெரியப் படுத்தியிருந்தார் !

(அடடா ! அவர் ஜாகிங்கை முடித்து விட்டார் ! அவரைக் கவனித்தது போதும் கதைக்குப் போவோம் !)
     முந்தைய நாள் கொண்டாட்டங்களைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதைப் பார்த்தவாறே வேலைக் காரன் கொடுத்த காஃபியைப் பருகினார் ! அவரது கை பேசி குறுஞ்செய்தி என்று குரல் கொடுத்தது !
  மெல்ல அதைத் தடவிப் பார்த்தார் ஒரு unknown no ல் இருந்து #How_IS_THE_GIFT? #BE_HAPPY_TO_DIE ! என்ற வார்த்தைகள் !
 மெல்லப் புன்னகைத்து விட்டுப் படியேறிச் சென்றார் ! எத்தனை மிரட்டல்களை இந்த இருபது ஆண்டுகளில் பார்த்திருக்கிறேன் !
அவரது அறையில் மெல்ல இசையை ஒலிக்க விட்டு Sumi என்று அழைத்தார் ! பதில் வரவில்லை!

Kalidass என்று அழைத்துக் கொண்டே அந்த  அறைக்குள் நுழைந்தார் ! அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! நடுவே #BE_HAPPY என்ற வார்த்தைகளோடு இருந்த அந்த பார்சல் அவர் கண்ணில் பட்டது ! 
அந்த எஸ்.எம்.எஸ் அவர் கண்ணில் வந்து போக, அந்தப் பார்சலை எடுத்தார் ! 
BE HAPPYக்கு அருகே சிறியதாக TO DIE என்ற வார்த்தைகள் தெரிய மெல்ல வழிந்த வியர்வையோடு

மெல்லப்
.
.
பிரித்தார் !

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பானை ஒன்று மூடியிருந்தது !

மூடியைப் பிரித்தார் ! கருப்பாக எதோ தெரிய கவிழ்த்தார்!
சர்ரென்று
மணல் குவியல்
கொட்டியது 
அதன் நடுவே
.
.
.
.
.
ஒரு  துண்டிக்கப் பட்ட 
ஆள் காட்டி விரலும், 
நடுவிரலும் !

 பதறி உதறியவர் 

#காளீ என்று கத்தினார் !

தொடரும் -4