Thursday, April 1, 2010

சுரேஷின் பக்கங்கள்: அங்காடித் தெரு

http://www.facebook.com/suresh.dhakshinamoorthy?v=app_2347471856#!/notes/suresh-dhakshinamoorthy/akait-teru/374740108052

அங்காடித் தெரு

தியேட்டரில் போய் படம் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு..!! நேற்று வேலை முடியும்போது எனது சக ஸ்டோர் மேனேஜர்கள் இருவர் வந்தனர்...!! சார் நாளைக்கு உங்களுக்கு விடுமுறைதானே..!! தாம்பரம் நேஷனல் தியேட்டரில் அங்காடித் தெரு படம் ஓடுது சார்..!!! போலாம் சார்..!! நம்ம........... னா ஸ்டோர் கதைன்னு சொன்னாங்க சார்.!! என்றார்கள்...!! அவர்களிருவருமே அந்த அண்ணாச்சி கடையில் 2 வருடத்துக்கு மேல் வேலை பார்த்தவர்கள்...!!

வண்டிகளை விரட்டி, நிறுத்தி உள்ளே செல்வதற்குள் படம் ஆரம்பித்து விட்டார்கள்..!!!

மெதுவாக கதைக்குள் செல்ல ஆரம்பிக்க, என் இருபுறமும் இருந்தவர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் கை தட்டினார்கள்..!! சார்.!! இப்படித்தான் சார் சோறு போடுவானுங்க..!! இப்படித்தான் சார் படுத்துக் கிடப்போம்...!! இப்படித்தான் சார் கண்ணு மண்ணு தெரியாம அடிப்பானுங்க..!! என்று அவர்கள் அடித்த கமெண்ட்கள் , அவர்கள் முக உணர்ச்சிகள், நிஜத்தைப் பறை சாற்றின...!!!!

அதற்கேற்றார் போல் மிக அழகாய் கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார் வசந்த பாலன்..!!

ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை..!! வயோதிக முஸ்லிம் முதியவர், கண் தெரியாதவர், உயரக் குறைவானவரும் அவரது மனைவியும்..!! செந்தில் முருகன் ஸ்டோரில் வேலை பார்த்தே காலில் சரும நோய் வந்து இறப்பவர்..!! பளிச்சென்று வந்து பகீரென முடியும் அந்தத் துயரக் காதல் ஜோடி, என ஒவ்வொரு அணிகலனும் அருமையாய் அமைய அற்புத நகையாய் மின்னுகிறது அங்காடித் தெரு..!!!
முக்கியமாய் நாயகி கனி..!!

சின்னச் சின்ன பாவனைகளையும், கண்களால் பேசும் கவிதைகளையும், பளீரென மாறும் முக மாற்றங்களையும், இயல்பாக வெளிப்படுத்தும் அஞ்சலி...!! அற்புதமான தேர்வு...!! கற்றது தமிழுக்கு அடுத்து கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு..!!
பயன்படுத்திக் கொண்டார் என்றால் தமிழ் பேசும் திரையுலகுக்கு இன்னொரு திறமையான நடிகை கிடைப்பார்..!!

நாயகன் லிங்கு..!!

எளிமையான தோற்றம், சில இடங்களில் நடிக்கக் கஷ்டப் படுவதுபோல் முகம் காட்டினாலும், பாத்திரத்திற்கு இயல்பாகவே பொருந்திப் போகிறார்..!! நாயகியிடம் ஹாஸ்டலில் இரவு புகுந்து வெடிக்கும் போதும், கடைசிக் காட்சிகளிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்..!!

யாரும் முயற்சிக்காத கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த வசந்த பாலனுக்குப் பாராட்டுக்கள்..!! நாம் தினம் வரும் ஒரு கடையில் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா என்று சற்று அருகில் இருக்கும் சில தம்பதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்..!

உணவுக்காக அடித்துக் கொள்ளும் மெஸ், உறங்கக் கூட இடமில்லா தங்குமிடம்,சூபர்வைசர், அண்ணாச்சி என வெளிப்படும் கொடூரங்கள்..!! மாதாமாதம் மறக்காது அண்ணாச்சியால் கவனிக்கப்படும் அரசுத் துறைகள், அண்ணாச்சிக்குக் காவடி தூக்கும் காவல் துறை, இரவு நேரச் சென்னை, என்று எல்லா விடயங்களிலும் புகுந்து வந்திருக்கிறார் இயக்குநர்..!!

நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு படம் பார்த்த திருப்தி..!! படம் பார்த்து வெளிவந்ததும் எங்கள் மூவரிடையே ஒரு நீண்ட மௌனம்...!! படம் பாதித்து இருக்கிறது என்று புரிந்தது..!! ஒரு சக நிர்வாகி மெல்ல வாய் திறந்தார்" இப்படித்தான் சார் அந்த ஸ்டோரில் ஒரு பெண்ணை லவ் பண்ணினான்னு ஒருத்தனை அடிச்சே கொன்னுட்டாங்க....!!" "அந்தப் பெண்ணை....................
...' அடுத்த நாள் எதுவும் நடக்காத மாதிரி வேலையெல்லாம் நடந்துச்சு சார்..!! அன்னிக்கு அந்த வேலை வேண்டாம்னு அந்தக் கடையை விட்டு வெளியில் வந்துட்டோம் சார்..!! இந்த படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வந்துடுச்சு சார்....!! என்றனர்..!!


மொத்தத்தில் நாளை இது போன்ற ஒரு கடையில் வேலை பார்க்கும் சிப்பந்தியை ஏளனமாய் "ஏய்..!! அதை எடுத்துக் கொடு...!! இதை எடுத்துக் கொடு" என்று மிரட்டிக் கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்களில் ஒருவரேனும், அவர்கள் மீது இரக்கப் பார்வை பார்த்தார்கள் என்றால் அதுவே இப்படத்துக்கு மிகப் பெரிய வெற்றி..!!