அப்ரூவல் மறுநாள் மதியம் 3 மணிக்குத்தான் வந்தது. ஆனால் ஒரு லட்சத்துக்கு அனுப்பிய அப்ரூவலுக்கு வெறும் ஐம்பதாயிரம் தான் அனுமதி கிடைத்தது. உடனே அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் நேரம் குறித்தார்.
இரவு ஒன்பது மணிக்கு அறுவை சிகிச்சை அரங்கிற்கு( அதாங்க ஆப்ரேஷன் தியேட்டர்) அழைத்துச் செல்லப் பட்டேன். கை நரம்பில் ஒரு ட்யூப் செருகி அதில் ஒரு ஊசியை நுழைத்தார், அடுத்த நொடியே அரை மயக்க நிலைக்குச் சென்றேன். ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் உணர்ச்சியற்ற நிலை. சற்று நேரத்தில் முற்றிலும் மயக்கமடைந்தேன். மறுபடி கண் விழித்த போது, எதோ சக்கரக் கட்டிலில் அழைத்துச் செல்லப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சுற்றிலும் நண்பர்கள் , அம்மா, மாமா எல்லோரும் நிற்பது போன்ற ஒரு நிழலுருவாய்த் தோன்றியது. ஆனாலும் முழு நினைவாய்த் தெரியவில்லை. ஒரு முழுதும் குளிரூட்டப்பட்ட பெரிய அறையின் ஒரு மூலையில் இருக்கும் படுக்கைக்கு அழைத்துச் செல்லப் பட்டேன்
No comments:
Post a Comment