Sunday, May 7, 2017

நதியோரம் சதிநேரம் - 1

மெல்ல இருள் படலம் நீங்கி, சூரியன்  சோம்பல் முறித்து உதயமாக ஆயத்தமானான் ! பறவைகள் தங்கள் கடமைகளை எண்ணி வரிசையாய்ப் பறக்க ஆரம்பித்தன !
அந்த வரதராஜ புரத்தின் ஆரவல்லி நதியில் மிச்ச மீதி எச்சங்கள் நடுவே இருக்க, அள்ளியது போக மீதி இருந்த மணல் பிரதேசங்கள் எனது வாழ்வு இன்னும் எவ்வளவு நாளோ என்று ஒதுங்கிக் கிடந்தன !

கடமைக்காகக் கூவிய சேவல் ஒலி கேட்டு, கருப்பாயி விழித்துக் கொண்டாள் !

"அடக் கெரகமே ! பொழுது விடிஞ்சில்ல போச்சு ? தூங்கிட்டுல்ல கிடந்துருக்கோம்?
யோவ் எந்திரிய்யா ! பொசபொசன்னு விடிஞ்சி போச்சு, வயலோரம் போய் வாரேன்!  ஆச்சி வீட்ல பாலை வாங்கி காய்ச்சி வையி என்று சொல்லி கிளம்பினாள்!
அந்த ஊருக்கு கழிப்பறை, குளியலறை, துணி துவைக்கும் இடம், இதர பிற விஷயங்களுக்கும் அந்த ஆரவல்லி நதி தீரம் தான் ஒரே வழி !
அடுத்த வீட்டு அமுதாவையும், எதிர் வீட்டு வேலாயியையும் அழைத்துக் கொண்டு மூவரும் அந்த நதியோர புதர்களிடையே சென்று மறைந்தார்கள் !

சற்று நேரத்தில் ..... !

#வீல்.......! ஐயோ என்ற சத்தம் வேலாயிடம் இருந்து!

என்னடி ஆச்சு ! கூவுற என்று கேட்டபடி பதறி வந்த கருப்பாயியும், அமுதாவும் அதிர்ச்சியாகி  வேலாயியோடு  சேர்ந்து  கத்த ஆரம்பித்தார்கள் !
.
.
.
.
.
.
அங்கே .......!!

.
.
.
.
.
.
.
.
. ஊர் பெரிய மிராசு சின்னைய்யா உயிரற்ற விழிகளோடு  புதரின் மறைவில் வெட்டுக் காயங்களோடு விழுந்து கிடந்தார் !

...... தொடரும்

.

.

No comments: