வலக்கையைத் தூக்கவே முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் தான் இடது தோளில் ஏற்பட்ட சிறு முறிவு சரியாகி இருபது நாட்களாகத்தான் வண்டி ஓட்ட ஆரம்பித்திருந்தேன். இப்போது வலது கை...!!!
சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை. எனது அலைபேசியை எடுத்துப் பேசலாம் என்றால், அது விழுந்த அதிர்ச்சியில் செயலிழந்து இருந்தது. பாழாய்ப் போன இந்த அலைபேசிகளால், எப்போதும் நினைவிலிருக்கும் எண்களெல்லாம் இப்போது நினைவுக்கே வருவதில்லை. பின்னர் ஒரு ஓரமாய் ஃபிளாட்பார்மில் அமர்ந்து இடது கையால், அலைபேசியைக் கழற்றி, பேட்டரியை வெளியில் எடுத்து மீண்டும் இணைத்து இயக்கினேன். நல்ல வேளை உடனே இணைப்பு கிடைத்தது. என் நெருங்கிய நண்பர் சங்கர் என்பவருக்கும், உடன் வேலை பார்க்கும் கணேஷ் என்ற நண்பருக்கும் அலைபேசியில் அழைத்து உடனே வரச் சொன்னேன். கண்டிப்பாகத் தெரிந்தது. எதோ எலும்பு முறிவு நிச்சயம் அது தோளிலா அல்லது மேல் கையிலா என்ற குழப்பம் மட்டுமே..!!!
அய்யோ மறுபடி மருத்துவமனையாஆஆஆ என்று மனது கேள்விகள் கேட்கத் தொடங்கியது...!!!
நண்பர் வந்தவுடன் அவரோடு அவரது வாகனத்திலேறி அருகில் இருக்கும் தி.நகரில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்..!!!
அங்கு ஆரம்ப கட்டப் பரிசோதனைகள் முடிந்து எலும்பு முறிவை மருத்துவர் உறுதி செய்தார்.
அங்குதான் பிரச்னைகளின் பூதாகரம் ஆரம்பித்தது...!!!! மெடிக்ளெய்ம் இன்ஸ்யூரன்ஸ் என்ற வடிவில்
தொடரும்
No comments:
Post a Comment