Wednesday, March 18, 2009

மோதலில் விழுந்தேன் 1 (அல்லது ) மருத்துவமனை பயங்கரங்கள் :)

நம்ம கலைஞர் தான் தினசரி தனது மருத்துவமனை அனுபவங்களை எழுதி தினகரனில் வெளிட்டு வருகிறார். சரி..!!!! நம்மளும் நம்ம மருத்துவமனை அனுபவங்களை வெளியிடுவோமேன்னு ஒரு ஃபீலிங்.

அதான் இப்போ என்னுடைய மருத்துவமனை அனுபவங்கள்.

முதலில்.....!!!!!!!!!!!!!!!!!

அந்த நாள்...............!!!!!!!!!!!!!!!!!!!!!! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி...!!! என்னுடைய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் ஸ்டோரில் இரவு 7 மணிக்கு , திடீர்னு ஒரு ஆடிட்டர் வந்தார். கணக்கு வழக்குகளைப் பார்வையிட...!! சரின்னு பார்வையிடுங்கன்னு ஆரம்பித்த விடயம் போய்க்கிட்டே இருந்தது.............!!!!!!!!!!!!!! வேலை முடியும் போது நள்ளிரவு 2:30 மணி....!! சரின்னு வண்டியை (ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ்) வீட்டுக்கு விரட்டினேன். சரியான தூக்கம்...!!! காலை 6 மணியிருக்கும்....!!! எனது மேலாளரிடமிருந்து அலைபேசி அழைப்பு..!!! சுரேஷ் 9 மணிக்கு மயிலாப்பூர் HOல மீட்டிங்..!! ஷார்ப்பா வந்துடுன்னு...!!!

நமக்கு தூக்கம் போச்சு...!! நான் வந்து படுத்ததே 3:30 மணிக்கு, இரண்டரை மணிநேரத்தில் அழைப்பு வந்த வுடன், கடமையைக் காரணம் காட்டி தூக்கத்தைத் தொலைத்தேன்.

எல்லாவேலைகளையும் முடித்து விட்டு, எனது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் சென்று, தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, ரிலையன்ஸின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் நோக்கி எனது பைக்கில் புறப்பட்டேன்.............!!!!!!!!! மணி 8:40 AM.


மெதுவாக பரங்கிமலை ரெயில் நிறுத்தம் வந்து, இடப்புறம் திரும்பி, கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் திரும்பி, கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வந்து கிண்டி வழியாக அண்ணாசாலையில் என் பயணம் ஆரம்பித்தது. ஒரு ஐந்தே நிமிடத்தில் கிண்டி ரெயில்வே மேம்பாலம் வந்தது. அதில் எனது வண்டியைச் சற்று வேகமாக செலுத்தினேன். பாலம் இறங்கும் இடத்தில் இரண்டு நல்ல நண்பர்கள் சாலையைக் கடக்கும் நோக்கோடு, பாதைப் பிரிப்பான்(Divider) நின்று கொண்டிருந்தார்கள். சாலையைக் கடக்க முன் வருவதும், பின் மீண்டும் டிவைடரிடம் செல்வது, திருப்பிக் கடக்க முயற்சிப்பது என்றவாறே நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களைச் சரியாக கவனிக்காதது தான் எனது விபத்து நிலைக்குக் காரணமாகவும் இருக்கலாம்.

பாலத்தின் இறக்கத்தில், புவீயீர்ப்பு விசையின் காரணமோ, என் விதியின் காரணமோ எனது வண்டி சற்றே வேகத்துடன் இறங்கியது. அந்த நேரத்தில் மேற்சொன்ன நண்பர்கள் இருபுறமும் வாகனங்கள் வருவதை கவனியாமல், அதுவும் நான் சற்று வேகத்துடன் வருவதை அறியாமல் சட்டென்று சாலையைக் கடக்க முற்பட்டனர். கடைசி விநாடிகளில் அவர்கள் சாலையைக் கடப்பதை அறிந்து உடனே வண்டியை நிறுத்துவதற்காக இரண்டு ஃப்ரேக்குகளையும் ஒருசேரப் பிடித்தேன். விதி அங்கு தான் விளையாடியது...!!!!!!!!! வண்டி சரேலேனச் சாய்ந்து, டிவைடரின் சிமெண்ட் பகுதிக்கு இழுத்துச் சென்றது..!!! கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த சிமெண்ட் டிவைடரின் கற் கட்டிடத்தில் எனது வண்டியோடு சேர்ந்து மோதினே. கற்பகுதியில் எனது தோற்பட்டை பளீரென மோதியது.........!!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர் போகும் வலி..!!!! சாலையைக் கடந்த நண்பர்கள், இந்த விபத்தைக் கண்டவுடன் பறந்தோடிப் போயினர்......!!!!!!!!!!! போக்குவரத்துப் போலிசாரின் உதவியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தி, பின் பார்த்தால் வலது தோளில் உயிர் போகும் வ்லி....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தொடரும்

No comments: