Saturday, May 27, 2017

நதியோரம்_சதிநேரம்_5

வரதராஜபுரம்

நீங்க பதைபதைக்கற அளவு செத்தவங்க ஒன்னும் உத்தம சிகாமணிங்க இல்லையே என்ற சித்தானந்தின் வார்த்தைகளைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அமரேந்திரன்
திகைத்து
என்ன சொல்றிங்க ? என்றார் !
சித்தானந்த் சிரித்துக் கொண்டே ஈஆளுங்களை உங்களுக்குத் தெரியாது இல்லையா சார் ?  என்று  கேட்டதும், அமரேந்திரன் சற்று கறுத்து பின் எனக்கு எப்படி தெரியும் ! நான் உங்களைக் கேள்வி கேட்டால் நீங்க என்னைக் கேட்கறிங்களா ? வர வர மீடியாவோட திமிருக்கு அளவில்லாமப் போச்சு என்றார் !

அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !
அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !சித்துவும் அமரேந்திரனும் திரும்பிப் பார்த்த போது உசிலைமணி போன்ற உருவத்தில் ஒரு பெரியவர் செல்வராசுவுடைய உடலருகே போக முயற்சி செய்து கொண்டிருந்தார் ! அவரை கைத்தாங்கலாக Valli வள்ளிநாயகம் பிடித்துக் கொண்டிருந்தான்!
அமரேந்திரன் விரைந்து அருகில் சென்றார் ! அய்யா அவசரப் படாதிங்க ! நில்லுங்க என்றார் !
யோவ் அமரு ! இதுக்காய்யா இவ்ளோ கஷ்டப் பட்டோம் ! ? என் குருத்தைக் கொலை பண்ணிட்டுப் போனவன் யாருடே என்று கதறினார் ! திடுக்கிட்டுப் போன அமரேந்திரன் அவரை அணைத்து காதருகில் ஐயா ! அமைதியா இருங்க ! உங்களை எனக்குத் தெரியும்னு இங்க யாருக்கும் தெரியாது என்றார் !
உடனே அருகில் இருந்த வள்ளிநாயகம் இப்போ எனக்குத் தெரிஞ்சு போச்சே என்றான் !
 டேய் ! பேசாம இரு சொக்கத் தங்கம் என்று அரற்றிய பெரியவர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு யாரு சார் இவனைக் கொன்னது ? என்று கேட்டார் ! இல்லைங்கய்யா ! ஒரு தடயமும் கிடைக்கலை ! நான் உங்களை நேரில் பார்க்கிறேன் !
நீங்க இப்ப கிளம்புங்க, போஸ்ட் மார்ட்டம் முடிச்சப்புறம் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன் என்றார் !
வள்ளிநாயகத்தை அணைத்தவாறே அந்தப்பெரியவர் சென்றார்!

 அப்போது பின்னாலிருந்து வந்த  சித்து என்ன சார் ! இது யாருன்னு பொணத்தைப் பார்த்துக் கேட்டிங்க, ஆனா அவங்க அப்பா கூட சகஜமாப் பேசறிங்க என்றதும் ! திடீரென்று ஒருமைக்குத் தாவிய அமரேந்திரன் யோவ் நீ என்ன பெரிய அர்னாப்பா ரொம்பக் கேள்வி கேட்கற ? பத்திரிகைன்னு மரியாதை கொடுக்கறேன் கெடுத்துக்காதே ! என்று கூவினார்!

  மெல்ல அமைதியாக சிரித்த சித்து  சார் ! இந்த ஊருல என்ன நடக்குதுன்னு நான் 2 மாசமாய்க் கவனிச்சிட்டு இருக்கேன்!  அந்தப் பெரியவர் அருணாச்சலம் , அவர் பையன் செல்வராசு, மிராசு சின்னய்யா,  நீங்க எல்லாம் சேர்ந்து .......................
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைரன் ஒலி ஒலித்தது !
   கமிஷனர் வந்துட்டாரு !   இருய்யா உன்னை வந்து கவனிச்சிக்கறேன் என்று அமரேந்திரன்  வேகவேகமாக அங்கு வ்ந்து நின்ற ஜீப் அருகே சென்றார் !
மெல்ல முன் கதவைத் திறந்து விரைப்பாக சல்யூட் அடித்துத் தளர்ந்தார் ! இறங்கியவரைப் பார்த்து குழம்பி இது கமிஷனர் இல்லையே ? என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிரைவர் இருக்கையில் இருந்து குதித்து இறங்கினார் கமிஷனர் வெங்கடேஷ் ஆறுமுகம் !
     ஆஜானுபாகுவான உயரம் ! நீண்டு வளர்ந்த கைகள், மூக்குக்கும், உதடுக்கும் நடுப்பட்ட பகுதி முழுவதையும் முறுக்கி வளர்த்த மீசையால் நிரப்பியிருந்தார் !
    என்ன மிஸ்டர் அமரேந்திரன் !
என்ன ஆச்சு எதும் தடயம் கிடைச்சதா?
அந்த நியூஸ் எப்படிக் கசிஞ்சது ? விசாரிச்சிங்களா ?
Bodys இருக்கா இல்லை போஸ்ட் மார்ட்டம் போயாச்சா
என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே விரைவாக நடந்த கமிஷனரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அமரேந்திரன் ஓடினார் !
  சார் ! வந்து இப்போ தான் வேன் வந்து இரண்டு பாடியையும் எடுத்துட்டுப் போயிருக்கு சார் !
ஃபாரன்ஸிக் டீம் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க சார் !
போலிஸ் நாய்  இந்த இரண்டாவது பாடியை ஐடன்டிஃபை பண்ணிட்டு அப்படியே நின்னுடுச்சு சார்!
வேற எதும் தடயம் கிடைக்கலை சார் !
என்று கடகடவென்று ஒப்பித்தார் அமரேந்திரன் !

அப்புறம் யாருய்யா அந்த நியூஸைச் சொன்னது என்று கேட்டதும், சித்துவைக் கை காண்பித்து இவன்    தான் சார் ! அதான் விசாரிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க என்று கை காட்டினார் !

சித்துவிடம் வேகமாகச் சென்ற கமிஷனர்
.
.
.
.
.

 என்னய்யா நினைச்சிட்டு இருக்க ?
உன் இஷ்டத்துக்கு நியூஸ் போடுவியா ?
 போலிஸுக்கு வேற வேலை இல்லையா
பத்திரிகைன்னா பெரிய கொம்பா ?
.
.
.
.
.
.
.
இப்படின்னெல்லாம் உங்க
 கிட்ட அமரேந்திரன் கேட்டுருப்பாரே சித்து ! ? என்று  சிரித்தபடியே சித்துவிடம் கை கொடுத்தார் வெங்கடேஷ் !

.
.
.
.
.
வெடிச் சிரிப்போடு ஆமோதித்த சித்து
ஆமாம்   சார் !
இன்ஸ்பெக்டர் என்னைப் பிரிச்சு மேஞ்சிட்டாரு என்றார் !
.
.
.
.
.
விக்கித்து நின்ற அமரேந்திரனிடம்
என்னய்யா பார்க்கிற ? இவர் ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் இல்லை !
.
.
.
ஆனந்த்குமார் ஐபிஎஸ்   ! என்றார் !

தொடரும் - 5

No comments: