Monday, May 29, 2017

நதியோரம்_சதிநேரம்_பகுதி_6காளி என்று கத்திய SDமூர்த்தி கத்திய கத்தலுக்கு அலறி ஓடி வந்தான் Kalidass ! என்னண்ணே ! என்னாச்சு? காலையில இவ்ளோ டென்சனாயிருக்கீங்க ? என்று பதறிய வாறு உள்ளே நுழைந்தான் ! நுழைந்தவன் கீழே விழுந்து கிடந்த பானை, மணல் குவியல், விரல்களைக் கண்டு அதிர்ந்தான் ! யாருண்ணே ? யாருண்ணே அனுப்பினது ? அண்ணே ! அண்ணே ! என்று அழைத்தவாறே அதிர்ச்சியில் அமர்ந்திருந்த மூர்த்தியின் தோள்களைத் தொட்டான் !
அது வரை வெறித்து அமர்ந்திருந்த மூர்த்தி அதிர்ந்து எழுந்தார் ! அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து விடாமல் குடித்து முடித்தார் !
எலே காளி ! இவன் யாருன்னு தெரிஞ்சாகணும் ! தமிழ்நாட்டு தலைவர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டறவன் நான் ! எனக்கே விரலை அனுப்பி பயமுறுத்தறானா ? கூப்பிடுடா போலிஸை ! இன்னிக்கு ஈவினிங்குள்ள அவன் எனக்கு வேணும் என்று படபடத்தார் !
காளி பொறுமையாக அண்ணே ! நம்ம போலிஸ் மந்திரி Ilanchezhian க்கும் உங்களுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை ! அந்தாளு எப்படா உங்களைக் காலி பண்ணலாம்னு பார்த்துட்டு இருக்காப்ல ! இந்த விஷயம் போலிஸுக்குப் போச்சு, அவன் காதுக்குப் போகும், அவனே உங்களைக் கோர்த்து விட்டுருவான் ! உட்காருங்கண்ணே ! சூதானமா யோசிப்போம் ! கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே என்றவன் ! சட்டென்று உள்ளே சென்று இரு கைகளிலும் கையுறையோடு வந்தான். மிகக் கவனமாக அந்தப் பானை, மணல் குவியல் விரல்களை எடுத்து அந்தப் பேப்பரையும் எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்தான் !
அப்போது என்ன மூர்த்தி கத்திட்டே இருக்க என்று அந்த அறைக்குள்இரண்டு கைகளிலும் காஃபி கோப்பைகளோடு நுழைந்தாள் Sumi !
   ஐந்து அடி இருக்கும் ! விரிந்து ஒதுங்கியிருந்த கூந்தல், ப்யூட்டி பார்லர்களில் திருத்தப் பட்ட புருவம், சற்றே விரிந்த தாமரை போன்ற கண்கள், கூர்மையான நாசி, அழகான வரிசைப்பற்கள், அளவெடுத்து அமைந்த சிலை போல பளபளக்கும் அந்த நைட்டியில் வந்து நின்ற சுமியை
அந்த நிலையிலும் சில நிமிடங்கள் ரசித்துப் பார்த்த மூர்த்தியின் அருகில் காஃபி கோப்பையை வைத்து விட்டு அவர் தலையைக் கோதி
என்ன ஆச்சு மேன் ! பேயடிச்ச மாதிரி இருக்கே ! ஏன் கத்தினே என்று அருகில் அமர்ந்தாள் !
காளி சட்டென்று மூர்த்தியிடம் கண்ணைக் காண்பித்து #அண்ணி ஒன்னுமில்ல ! ஒரு டென்டர் விவகாரம் ! அண்ணனுக்குத் தெரியாம ஒரு விஷயம் நடந்து போச்சு ! அதான் அண்ணன் கத்திட்டு இருந்தார் என்றான் !
நோ மூர்த்தி ! ஸம்திங் ராங் வித் யூ ! கொஞ்ச நாளா சரியில்லை நீ ! எதோ ராங்கான ரூட்ல போயிட்டுருக்கியோன்னு டவுட்டா இருக்கு ! என்ன ப்ரச்னை எங்கிட்ட சொல்லு ! என்றாள் !
மூர்த்தி சட்டென்று முகத்தை மாற்றி ஹைய்யோ ஒன்னும் இல்ல செல்லம் ! கொஞ்சம் அரசியல் டென்சன் ! உனக்குத் தெரியாததா ?
சுப்ரீம் கோர்ட்டோட
ஒன் ஆஃப் தி லீடிங் லாயர் நீ ! உனக்குத் தெரியாததா ?
 ரிலாக்ஸ் பேபி ! நீ டெல்லி ப்ராக்டிஸ் ! நான் சென்னை அரசியல்வாதி !நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறதே அபூர்வம்! ! ரிலாக்ஸ் பேபி ! இன்னும் ஒரு வாரத்துல சட்டமன்றக் கூட்டம் ஆரம்பிச்சிடும் ! அதுக்கப்புறம் என்னாலயும் ஃப்ரியா இருக்க முடியாது ! இரு நம்ம எங்கயாச்சும் வெளில போகலாம்! என்னை ஒரு ஹாஃப் அவர் ஃப்ரியா விடு ! லெட்ஸ் செலிப்ரேட் என்றார் மூர்த்தி ! முகத்தில் சற்று நம்பிக்கையில்லாத பார்வையோடு காப்பிக் கோப்பையைப் பருகிக் கொண்டே வெளியே சென்றாள் சுமி !
காளி சற்று ரிலாக்ஸாகி அண்ணே ! நல்ல வேளை உளறிக் கொட்டாம இருந்திங்க ! அண்ணி நீதி நேர்மை சமதர்மம்னு சுத்திட்டு இருப்பாங்க ! இன்னும் உங்களை பழைய நேர்மை விளம்பி எஸ்டிஎம்னு நினைச்சிட்டு இருக்காங்க ! என்றவனை முறைத்த மூர்த்தி அந்தப் பேச்சை விடுடா ! இப்போ இந்த விவகாரத்தை எப்படி ஹேண்டில் பண்ணப் போற என்றார் !
ஆமா நான் இதை ஹேண்டில் பண்ணனும், இந்தாளு அந்தம்மாவைக் கூட்டிட்டு சுத்தப் போயிடுவாரு ! என்ன பொழப்புடா என்று மனதில் நினைத்தவாறே வெளியில் அண்ணே ! போலிஸுக்குப் போறதை விட எனக்குத் தெரிஞ்ச ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் கம்பெனி இருக்கு ! சுட்டுப் போட்டாலும் ரகசியத்தை வெளியில் சொல்ல மாட்டாங்க ! ஆனா வெவகாரத்தை ஹேண்டில் பண்றதுல கில்லி ! நம்ம சுகாதாரத் துறை அமைச்சர் Shanmugam Subramani வீட்டுல 100 கிலோ தங்கம் காணமப் போனப்ப , அவங்க தான் கண்டு பிடிச்சு, ஆளைப் பிடிச்சாங்க ! விவகாரத்தைக் காதும் காதும் வைச்ச மாதிரிப் பார்த்துக்குவாங்க ! மீடியாக்கு ஒரு நியூஸும் லீக் ஆகாது ! என்றான் !
மெல்ல நம்பிக்கை படர சரி காளி பார்த்து ஹேண்டில் பண்ணு ! ஒரு பொது இடத்துல மீட் பண்ணு ! விஷயம் எந்த காரணத்தைக் கொண்டும் லீக் ஆகக் கூடாது ! 2 நாள்ல அந்த ஆள் எனக்கு வேணும் என்றார் கண்ணில் வெறி மின்ன !
சென்னை க்ரோம் பேட்டை பகுதி
இராதா நகர் ஏரியாவின் ஒரு ஓரமாக அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு ! அந்தப் பெரிய கேட்டைத் திறந்து எட்டிப் பார்த்து சல்யூட் அடித்த அந்த செக்யூரிட்டியை லட்சியம் செய்யாமல் மெல்ல உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண் ! அந்த வீட்டின் காலிங் பெல் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய மணி தொங்க விடப் பட்டிருந்தது ! அதன் கயிறைப் பிடித்து இரண்டு முறை அடித்தாள் ! உடனே அதன் அருகில் இருந்த சிறிய கதவு திறந்தது ! அதனுள் கை வைத்து ஒரு சாவியை எடுத்தாள் ! பின் மெல்ல கதவு அருகில் இருக்கும் இன்னொரு சிறிய அறையைத் திறந்தாள் ! உள்ளே சிறிய பட்டன் இருந்தது ! பெரு மூச்சோடு அந்த பட்டனை அழுத்தினாள் !
வீட்டு வாசல் மேலே ஒரு விளக்கெரிந்தது ! அந்த விளக்கு முன் நின்று Anitha Jenifer here ! உடனே அந்தக் கதவு திறந்தது ! Pattuவெளியில் வந்து ஹாய் அனி ! வந்து நேரமாச்சா ! கமின் என்றான்!
டேய் பட்டு ! நம்ம பாஸ் அலும்பு தாங்க முடியலடா ! ஒரு கதவைத் திறக்கவே அலிபாபா குகை மாதிரி இவ்ளோ நேரம் ஆனா கஸ்டமர் எப்படிடா நம்மளைத் தேடி வருவாங்க ? டெய்லி இதுக்காகவே நான் அரைமணிநேரம் முன்னாடி வரவேண்டியிருக்கு ! என்றாள் !
டெய்லி வீட்டுக்குப் போயிட்டு வர உனக்கே அப்படி இருந்தா , கூடவே இருக்க எனக்கு எப்படி இருக்கும் ? கேட்டா#VM_டிடெக்டிவ்_ஏஜென்ஸின்னா சும்மாவான்னு கேக்கறாரு ! வக்கீலுக்குப் படிச்சிட்டு Pkp ஸார் நாவல் எல்லாம் படிச்சிட்டு என்னவோ பரத் ரேஞ்சுக்கு பில்டப்போட வந்தா, சுபா சாரோட செல்வா கிட்ட மாட்டிக்கிட்ட முருகேசனா ஆயிட்டு இருக்கேன் ! என்றான் !
அப்போது மெல்ல எதிரில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து "பட்டு என்ன அங்க சத்தம் என்று குரல் வந்தது ! பட்டு சும்மா பேசிட்டு இருந்தேன் சார் ! என்றான் ! ஒரு கேஸ் வந்திருக்கு ! இரண்டு பேரும் மேலே வாங்க என்றது குரல் !
பட்டுவும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மேலே சென்றனர் !
அந்த அறை சற்று விசாலமாக இருந்தது! அந்த அறையில் உள்ளே நுழைந்த அனிதா வீல் என்று கத்தினாள் ! அறையின் நடுவில் தலை கீழாக வெறித்த பார்வையோடு தொங்கிக் கொண்டிருந்தார் VM_Detective_Agencyயின் நாயகன் Kandan Mks

தொடரும் - 6


No comments: