Tuesday, June 13, 2017

நதியோரம்_சதிநேரம் 7

வெங்கடேஷ் ஆறுமுகம் ஆனந்த்குமார்ஐப் பார்த்து வெல் செட் ஆனந்த் ! அமரேந்திரன் கருப்பு ஆடுன்னு எப்படிக் கண்டு பிடிச்சிங்க ? உங்களைப் பத்தியும் உங்க ஸ்பெஷல் அஸைன்மென்ட் பத்தியும் டிஜிபி முன்னாடியே சொன்னாலும், உங்க சுதந்திரத்துல தலையிடக் கூடாதுன்னு தான் நான் கான்டாக்ட் பண்ணலை ! ஆனா இன்னிக்கு இந்தக் கொலைகள்னால உங்களை நீங்க வெளிப்படுத்திக்க வேண்டியதாயிடுச்சு இல்லையா என்றார் !
ஆனந்த் புன்னகைத்தார் ! இந்த விஷயம் நமக்குள்ள தானே சார் தெரியும் ! அமரேந்திரனை நம்ம ஸ்பெஷல் கஸ்டடில வச்சிருக்கோம் ! இன்னும் சில உண்மைகள் தெரிய வேண்டியிருக்கு ! அதுக்கு முன்னாடி இந்தக் கொலைகள் !
If you don't mind இந்த ப்ராஜெக்ட் பத்தி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணலாமா என்றார் வெங்கட் !
y not Sir? ! சொல்றேன் ! இது 8 மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ப்ராஜெக்ட் ! இதுக்காக ஆந்திராவில் ஆன்ட்டி நக்ஸலைட் ஸ்க்வாட்ல இருந்து என்னை ஸ்பெஷலா டெபுட் பண்ணி டிஜிபி ஒப்படைச்சார் !
இந்த திருச்சி, தஞ்சை மாவட்டத்தோட ஜீவன் காவிரி ! காவிரியோட பெரிய கிளை நதி ஆரவல்லி நதி ! ஆரவல்லி நதி கிட்டத்தட்ட 3 மாவட்டங்களோட கிராமங்கள் வழியா பாய்ஞ்சு நாகப்பட்டினம் தாண்டி பூம்புகார் கிட்ட காவிரியோட இணைஞ்சு, கடலில் கலக்குது ! 20 வருடங்களுக்கு முன் பச்சைப் பசேல்னு விவசாயம் வருஷம் முழுதும் செழித்து வளர்ந்திருந்த பூமி ! இப்போ ஒரு போகம் விளையவே வழியில்லாம இருக்காங்க! என்றார்
என்னங்க ஆனந்த்! ஆரவல்லி பத்தின டாகுமென்ட்ரி சொல்றிங்க ! ?
இது டாகுமென்ட்ரி இல்ல சார் ! #ஒரு_நதியின்_மரணம் !
என்றார் ஆனந்த் !
என்ன சொல்றிங்க ஆனந்த் ? இது பத்தி இந்த திருச்சி வட்டாரத்துல தினமுமே எதாவது கம்ப்ளெயின்ட் இருக்கும் ! இதுக்கு எதுக்கு ஸ்பெஷல் ஸ்க்வாட் !? புரியலையே ! என்ற கமிஷனரைச் சற்று விரக்தியாய் பார்த்தார் ஆனந்த் !
இது சின்ன விஷயம் இல்லை சார் !
மணல் மாஃபியானால இந்த 2 வருஷத்துல 28 கொலைகள் நடந்து இருக்கு ! 2 அரசு அதிகாரிங்க, , இன்ஃபாக்ட் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட 25 பொதுமக்கள் இறந்திருக்காங்க !
ஆனா இது எதுவுமே எங்கயுமே கேஸா பதிவாகலை !
இறந்த இன்ஸ்பெக்டர் இன்பசாகரன், சாலை விபத்துல இறந்ததா கேஸ் முடிஞ்சிடுச்சு ! ஆனா அவர் சாகறதுக்கு 2 நாள் முன்னாடி ஒரு மெயில் அனுப்பிச்சார் டிஜிபிக்கு ! அதுல ஆரவல்லி நதி மணல் மோசடி பத்தி மேலோட்டமா எழுதிருந்தார் ! டிஜிபியை சந்திக்க நேரம் கேட்டுருந்தார்! ஆனா அது பத்தி டிஜிபி விசாரிக்கறதுக்குள்ள அவர் இறந்துட்டார் !
இங்கே இருக்க யாரையும் நம்பாம,
ஐ ஆம் ஸாரி உங்களைக் கூட நம்பாம, என்னை இந்த ப்ராஜெக்டுக்கு அனுப்பினார் ! ஆனால் நான் வந்து 2 மாசம் கழிச்சி உங்களைப் பத்தின ரிப்போர்ட் கொடுத்ததும் தான் இந்த விஷயத்தை உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டார் ! என்று நிறுத்தினார் ஆனந்த் !
வெங்கட் க்ரேட் ! இவ்ளோ விஷயம் நடந்திருக்கா !? அந்த இன்ஸ்பெக்டர் இன்பசாகரன் இறந்தப்ப துளி கூட சந்தேகப் படலை ! Even போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூட விபத்துன்னு தான் சொல்லிச்சு ! என்றார் !
எஸ் சார் !
அது விபத்து தான் !
உருவாக்கப் பட்ட விபத்து !
இதுல இறந்த 2 அரசு அதிகாரிகள், கதையும் இதே மாதிரித்தான் !
இது விஷயமா நான் விசாரிக்கறப்பதான், சின்னைய்யா, செல்வராசு ரெண்டு பேரும் கூட்டா ஆரவல்லி கரை மணல் காண்ட்ராக்டை எடுத்து குவாரி வச்சு பண்ணிட்டு இருக்கறதைக் கண்டு பிடிச்சேன்! அரசு நிர்ணயிச்ச அளவை விட 30 மடங்கு மணல் கொள்ளை போகுது ! இதைக் கண்டு பிடிச்சுத் தட்டிக் கேட்ட வரதராஜ புரத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கொன்னுருக்காங்க ! ஆனா அதுக்கான ஆதாரங்கள் இல்லை ! அந்த மணல் குவாரில ஒருத்தனைக் கண்டு பிடிச்சேன் ! அவன் மூலமா சில இன்ஃபர்மேஷன் கிடைச்சது, அதை வச்சுத்தான் அமரேந்திரன் என் வளையத்துக்கு வந்தார் ! ஆனா அதுக்குள்ள அடுத்தடுத்து 2 மர்டர் ! என்று முடித்தார் ஆனந்த் !
அப்போது கமிஷனரின் செல்ஃபோன் வைப்ரேட் மோடில், கண்ணாடி மேஜையின் மேல் சப்தம் எழுப்பியது !
ஒரு நிமிடம் என்ற வெங்கட், செல்ஃபோனை இயக்கி காதருகே கொண்டு சென்றார் !
யாரது என்றார் !
ஹலோ கமிஷனர் சார் ! ஐ ஆம் Dr. Sathiya Vani ! ஜி.எச். டீன் என்றார் ! கமிஷனர் எஸ் மேம் சொல்லுங்க என்றார் !
சத்தியவாணி சார் இப்போ நீங்க ஹாஸ்பிடல் வர முடியுமா? என்றார் ! ஏன் மேம் என்னாச்சு !
நீங்க அனுப்பி வச்சிருந்த 2 டெட் பாடிஸ் போஸ்ட் மார்ட்டம் நடந்திட்டு இருக்கு! அதில..... I feel something is suspicious ! அந்த உடம்புல எல்லாம் .........! ஐ ஆம் ஸாரி சார் !
you can't understand my explanation in air !
Can you comedown quickly ? என்று டிஸ்கனெக்ட் ஆனார் !
ஆனந்த் அவர் முகத்தைப் பார்க்க, கமிஷனர் நாம இம்மீடியட்டா ஜி.எச் போகணும் ஆனந்த் ! டீன் தான் பேசினாங்க! அந்த 2 பேர் உடம்புலன்னு ஆரம்பிச்சு நம்மளை வரச் சொல்லிருக்காங்க !
Come On ! Lets Go ! என்று தொப்பியை அணிந்து கொண்டே எழுந்தார் !
கமிஷனர் ஜீப் அங்கிருந்து பதினைந்து நிமிடங்களில் அரசு மருத்துவமனையை அடைந்தது !
ஆனந்தும், வெங்கட்டும் டீன் அறையை அடைந்தனர் ! அங்கு வாசலில் சத்தியவாணி அவர்களை வரவேற்றார் !
சற்று இளம் வயதைக் கடந்திருந்தாலும் அதை மறைக்க முயற்சி எடுத்திருந்தார் ! பளிச்சென்று அணிந்த வெந்நிற கோட்டும், அடர்ந்த பச்சை நிறத்தில் வெந்நிறப்பூக்களோடு இருந்த சுடிதாரில் இருந்தார் , அழகான சிறிய ரிம்லெஸ் கண்ணாடி இன்னும் கண்ணியத்தைக் கூட்டிற்று ! நட்போடு சிரித்து
வாங்க சார் ! கம் வித் மீ என்று அழைத்துச் சென்றார் !
கிர்ர்ர் என்று ஏசி துடித்துக் கொண்டிருந்த அந்த அறை முன் சென்று கதவைத் தட்டினார் ! ஒரு இளைஞன் முகத்தில் மாஸ்கோடு வெண்ணிற கோட்டோடு வெளிப்பட்டான்! நல்ல சிவப்பு நிறத்தில் 51/2 அடி உயரத்தில் ஹிந்தி நடிகன் போல் இருந்தான் ! மாஸ்கை இறக்கி ஹலோ சார் ஐ ஏம் Doctor Parthi Ravichandra ! நான் தான் மேடத்து கிட்ட சொன்னேன் ! நவ் ஐ ஹேவ் கன்ஃபர்ம்டு டூ ..! என்றான் !
புரியாமல் பார்த்த இருவரையும் கண்டு மெல்ல புன்னகைத்த சத்யா, திரும்பி பார்த்தி இன்னும் அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்லவே இல்லை ! வெய்ட் ! உள்ளே வாங்க சார் ! என்றார் !
பார்த்தி தான் அந்த 2 டெட் பாடியையும் போஸ்ட் மார்ட்டம் பண்ணினார் ! அவங்க உடலுக்கு உள்ள ரத்தம் உறைஞ்சு நீலக் கலர்ல மாறி இருக்கு ! அவங்களோட இதயம் ஒரு நீலக் கல்லு மாதிரி இறுகியிருக்கு ! அவங்க உடல்ல ஒரு விதமான கனிமம் செலுத்தப் பட்டு இருக்கு ! அது தான் காரணம் என்றார் ! தன் மொபைலில் அந்த ஃபோட்டோக்களைக் காண்பித்ததும் ஆனந்தும், வெங்கட்டும் அதிர்ந்தார்கள் !
இதயம் ஒரு சிறிய பாறாங்கல் போல் நீலக் கலரில் இருந்த்து !
இது என்னதோ கனிமம்னு சொன்னீங்களே டாக்டர் என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா என்றார் ஆனந்த் !
எஸ் ஸார் ! அது பேரு #ரூட்டைல் (#Rutil) என்றார் சத்தியவாணி!
தொடரும் - 7

No comments: