Tuesday, June 13, 2017

நதியோரம் சதி நேரம்-9

தலைகீழாய்த் தொங்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த Kandan Mks ! அனிதாவின் அலறலைக் கேட்டுக் கீழே இறங்கினார் !
ஆறடிக்குச் சற்றுக் குறைவாக இருந்தார் ! அணிந்திருந்த அடர் நீல டி சர்ட் / வெளீர் நீல ஜீன்ஸ் கச்சிதமாக உடலில் அமர்ந்து இருந்தது ! நீண்டு திரண்டு முறுக்கேறிய கைகளும், அகன்ற விரல்களும்
அவர் ஜிம் வொர்க் அவுட் டை பறை சாற்றின ! குறும்பு கொப்பளிக்கும் கண்களும், அழகாய் வரிசையாய் அமைந்திட்ட பல்வரிசையும், சற்று அடர்ந்து மெல்லக் கீழிறங்கிய மீசையும், மழுக்க ஷேவ் செய்த கன்னங்களும் பார்க்கும் பெண்களை திரும்பிப் பார்க்க வைக்கும் மந்தகாசப் புன்னகையோடு சிரித்தார் எம்கேஎஸ்!

ஏன் சார் ! எப்ப பார்த்தாலும் இப்படி பயமுறுத்தறதே வேலையா இருக்கீங்க என்றாள் ! எம்கேஎஸ் சிரித்துக் கொண்டே நீ இருக்கறது டிடெக்டிவ் ஏஜென்ஸிம்மா ! என்னவோ ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரி கத்திட்டே இருக்கியே என்றார்!
பட்டு ! இன்னிக்கு நமக்கு ஒரு புது க்ளெயன்ட் வந்துருக்கார் ! அவர் பேரு Kalidass ! அவர் நம்மளை மீட் பண்ண டைம் கேட்டு இருக்கார் ! நீ , டீடெய்ல்ஸ் ரெடி பண்ணு என்றார்!
பட்டு எம்கேஎஸ்ஸிடம் சார் ! இந்த முறை நல்ல அரேபியன் ஹட்ல மீட் பண்ணலாம் சார் ! ஓஎம்ஆர்ல புதுசா ஒன்னு திறந்திருக்காங்களாம் சார் என்றான்!
Barbeque Nation கூட ஓஎம்ஆர்ல இருக்கே என்றாள் அனிதா !
வெய்ட் ! எந்த இடம்னு டிஸைட் பண்ணி இவருக்கு இன்ஃபர்மேஷன் கொடுங்க , நோட் டவுன் த நம்பர் என்றார் !

ஒரு பத்து நிமிடம் கழித்து பட்டு ! சார் இடம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன் ! ஓஎம் ஆர் பார்பிக் நேஷன் ! நமக்கு ஃபோன் பண்ணினது காளிதாஸ் ! அமைச்சர் எஸ்டிஎம்மோட வலது கை ! அமைச்சருக்கு நம்மால எதோ காரியம் ஆக வேண்டியிருக்குன்னு நினைக்கிறேன் பாஸ் ! என்றான் !
எம்கே எஸ் லேப்டாப் பார்த்துக் கொண்டே 2 நாள் முன்னாடி தான் பிறந்தநாள் கொண்டாடி இருக்கார் ! அடுத்த முதல்வர் கேன்டிடேட் அவர்தான்னு பேச்சு அடிபடுது ! நம்மளைத் தேடறார்னா அது முக்கியமான எதோ விஷயமாத்தான் இருக்கும் என்றார் !
பட்டு மெதுவாக அவரோட தல விதி அப்படின்னா நாம என்ன பண்றது ? என்றான் முணுமுணுப்பாக! அருகில் இருந்த அனிதா க்ளுக் என்று சிரித்தாள்!

விதியும் சிரித்தது !

#OMR
சென்னையின் பிரதான ஐடி ஏரியா!

சாலையின் இரு புறங்களும் பிரமாண்டமான கட்டிடங்களும், பெரிய பெரிய ரெஸ்டாரென்ட்களும், சிறிய அளவில் ஆந்திரா மெஸ்களும், க்ரீன் ட்ரென்ட்ஸ், நேச்சுரல் பார்லர்களும், ஜூஸ் சென்டர்களும், சிறிய தள்ளு வண்டிக் கடைகளும்,சிறிதும் பெரிதுமாய் பல கார்களும், அதி நவீன பைக் களும், முழுக்க ஏசி செய்யப் பட்ட வோல்வோ பேருந்துகளும், கோல்ஃப் சென்டரும், மால்களும், பெரிய சூப்பர் மார்க்கெட்களும் இவர்களோடு பல அழகான, சுமாரான, சூப்பரான, பெண்களும், ஆண்களும் அடையாள அட்டை சுமந்த கழுத்துப் பட்டைகளோடு எப்போதும் பரபரப்பாகவே உலாவும் இன்னொரு உலகம்!

அந்த ஹோண்டா சிட்டி கார் மெல்ல துரைப் பாக்கம் ரேடியல் சாலையைக் கடந்து மெல்ல சச்சின் கா தாபா என்ற பெரிய போர்டு அருகே நின்றது !
Kalidass டிரைவர் சீட் விட்டு இறங்கினான் !

நாம் ஏற்கனவே காளியைப் பார்த்திருக்கிறோம்!

அன்று Sumiயை எஸ்டிஎம் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் இவரை சரியாகப் பார்க்க வில்லை !
ஐந்தரை அடி உயரத்தில் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை என்ற இப்போதைய நவீன அரசியல்வாதியின் ஆஸ்தான உடையை அணிந்திருந்தான்! சட்டையின் உள்ளே தெரிந்த கனமான் செயினும், கையில் அணிந்திருந்த தங்கக் காப்பும் தங்கள் பகட்டைப் பறை சாற்றின ! மீசையற்ற முகத்தில் நான்கு நாட்கள் தாடி பறிக்கப் படா புற்களை போல் வளர்ந்திருந்தது ! இடது நெற்றியின் குறுக்காக இருந்த நீண்ட தழும்பு, அவனது அடிதடிக்கு அடையாளச் சின்னமாய் இருந்தது ! சற்றே சிகப்பேறிய விழிகள் அவன் அருந்திய பழரசத்தின் கதை சொல்லின ! சற்றே கருத்திருந்த தன் உதடுகளை நாவால் அடிக்கடி தடவி ஈரப் படுத்தி கொண்டிருந்தான்!


அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் சென்று பூமர் ஒன்றை வாங்கிக் கொண்டு மெல்ல சச்சின் தாபா உள்ளே சென்றான் ! இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டு நடக்கையில் எதிரே வந்தவர் மீது மோதி
பூமரைக் கீழே தவற விட்டான் ! பர்தா போட்ட அந்த உருவம் ஸாரி சார் ! பூமரை மிஸ் பண்ணிட்டிங்க என்று கையில் திணித்தது ! காளியும் ஸாரி மேடம் என்று சொல்லிக் கொண்டே கையைத் திறந்தான் ! சிறிய பேப்பர் துண்டில் சத்யபாமா காலேஜ் எதிர்புறம் என்று கிறுக்கலான எழுத்தில் எழுதியிருந்தது ! எதிரே அந்த பர்தா உருவம் இல்லை !

காளி அதைப் பார்த்து வேகமாக வெளியில் ஓடி வந்தான் ! இரண்டு புறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பர்தா அணிந்த யாரையும் காண வில்லை !

என்ன செய்வது ? சச்சின் தாபா தானே வரச் சொன்னாங்க ! இப்போ சத்யபாமா காலேஜ் எதிரில்னு சொல்றாங்களே ! சரி போய் பார்ப்போம் என்று வண்டியில் ஏறி கிளம்பினான்!
மெல்ல வேகமெடுத்து ஐந்தாறு சிக்னல்களைக் கடந்து சத்யபாமா காலேஜ் எதிரே இருக்கும் சர்வீஸ் ரோட் உள்ளே செலுத்தி ஒரு டீக்கடை அருகே நிறுத்தினான் ! தன் மொபைலை எடுத்து எம்கேஎஸ் எண்ணை அழுத்தினான் ! நீங்கள் டயல் செய்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது என்று சொன்னது!
வெறுப்பாகி மொபைலைப் பையில் வைத்த அருகே ஒருவர் வந்து சார் இந்த அட்ரஸ் எங்கே இருக்குன்னு தெரியுமா என்று கேட்டார் ! ஹலோ நானும் இந்த ஏரியா கிடையாது வேற யார் கிட்டயாச்சும் கேளுங்க என்றான் !
சார் ! ப்ளீஸ் நல்லா பார்த்துச் சொல்லுங்க என்றார் அவர் ! அவர் காண்பித்த சிறு துண்டு பேப்பரில் come to பார்பிக் நேஷன், என்று இருந்தது !
பார்த்து விட்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அவரைக் காண வில்லை !

என்னங்கடா இது ? ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பார்க்க வந்தால் இந்த ட்ராஃபிக்கில் இவ்ளோ சுத்த விடறாங்க ! என்று மறுபடி வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து யூ டர்ன் அடித்து திரும்பினான்!

#Barbeque_Nation மதியம் 11/2 மணியாததாலால் கணிப்பொறியாளர்களால் நிறைந்திருந்தது ! சுற்றி சுற்றி வந்ததால் சற்றே டென்சனாய் இருந்த காளியை அங்கே காத்திருப்போர் பட்டியலில் அமர வைக்கப் பட்டான்! வாட்சைப் பார்த்துக் கொண்டே வாசலையும் பார்த்துக் கொண்டேயிருந்த காளியை அருகிலிருந்து மிஸ்டர் காளி ! ஐ ஆம் பட்டு ஃப்ரம் விஎம்டிஏ ! தயவு செய்து திரும்பிப் பார்க்காதிங்க ! உங்களுக்கு டேபிள் 7 புக் ஆகியிருக்கு ! கேஷுவலா எழுந்து அங்கே போய் உட்காருங்க,! என் பாஸ் உங்களை அங்கே சந்திப்பார் என்றான் !
காளி திரும்பிப் பார்த்தான் ! ஒருவன் தன் காதுகளில் இயர் ஃபோன் அணிந்து கொண்டு டேப்லட்டில் முகத்தைப் புதைத்திருந்தான்! சுற்றி இருப்பவர்களில் யாராக இருக்கக் கூடும் என்று குழம்பி மெல்ல உள்ளே சென்றான் ! டேபிள் 7 ரிசர்வ்டு என்றான் பேரரிடம் ! டேபிளில் அமர்ந்தான் ! மெனு கார்டைப் பார்த்த படி இருந்தவன் அருகே வந்து அமர்ந்தார் அந்தப் பெரியவர் !
காளி பார்த்து சார் ! இது அல்ரெடி ரிசர்வ்ட் ! என்றான் ! அவர் கையமர்த்தி நான் எம்கேஎஸ் ! உங்களை 3 மணி நேரமாய் ஒரு பைக்கும், ஒரு காரும் ஃபாலோ பண்றாங்க ! அதைக் கன்ஃபார்ம் பண்ணத் தான் உங்களைச் சுத்த விட்டேன் ! இப்போ நான் எழுந்து எதிர் டேபிள் போயிறேன் ! உங்க ஃபோனுக்கு கால் வரும் அதுல பேசுங்க என்று வேகமாய்க் கூறி விட்டு சத்த்மாய் ஸாரி ஸார் ! தவறாய் உட்கார்ந்து விட்டேன் என்று சொல்லி எதிர் டேபிளில் சென்று அமர்ந்தார் !

காளிக்கு என்ன நடந்தது என்று புரியவே சிறிது நேரம் பிடித்தது ! அப்போது கை பேசி அழைத்தது ! இயக்கிப் பையில் வைத்துக் கொண்டு, ஹேண்ட்ஸ்ஃப்ரியாக வயர்களைக் காதுக்குப் பொருத்தி பேசத் தயாரானான்!

மறுமுனையில் இருந்து அமைச்சர் எஸ்டிஎம் முக்கு வந்த பார்சலில் என்ன இருந்ததுன்னு சொல்லுங்க காளி என்றார் எம்கேஎஸ் !

காளி திகைத்தான் ! வியர்த்தான் !

தொடரும் 9

No comments: